அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா.. மாறா ஜெயிச்சுரு அவ்வளவுதான்

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இவருக்கு ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகள் காரணமாக வணங்கான் திரைப்படத்தை அப்படியே சூர்யா நிறுத்தி வைத்துள்ளார். மேலும் படத்தில் கதையில் சில மாற்றங்கள் செய்யும்படி கூறியதால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்காக காளைகளை அடக்கும் வீரராக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

Also read: யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.. வணங்கான், வாடிவாசல் படத்தில் சூர்யா செய்யப் போகும் சம்பவம்

சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இப்புதிய படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகியான திஷா பட்டாணி நடிப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது இப்படத்திற்கு தான் சிவா அதிரடி என தலைப்பு வைத்துள்ளார். அதாவது படத்தில் சூர்யா ஒரு அதிரடி கதாநாயகனாக நடிக்கிறார். சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் சாமானிய மனிதனின் நடக்கும் பிரச்சினைகளையும் எப்படி அவர் எதிர்கொள்கிறார். மேலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுவதால் படத்தின் தலைப்பை சிவா வைத்துள்ளார்.

Also read: அனாவசிய பிரச்சனைகள் வேண்டவே வேண்டாம்.. ஜெட் வேகத்தில் எஸ்கேப் ஆகும் சூர்யா

சூர்யாவிற்கு சமீபகாலமாக எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை குறிப்பாக திரையரங்குகளில் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதனால் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படங்களில் கதையில் முக்கியத்துவம் கொடுக்கும் படி இயக்குனர்களிடம் கூறியுள்ளார்.

Also read: கொஞ்சம் கூட மதிக்காத சூர்யா.. மேடையிலேயே தைரியமாக சொன்ன பிரபலம்

மேலும் சூர்யா சிவாவிடம் படத்தின் தலைப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் கதையில் சில மாற்றங்கள் செய்யுங்கள் தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்களை மையமாக வைத்து கதையை உருவாக்குங்கள் என கூறியுள்ளார். மேலும் சூர்யாவிற்கு இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்