யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.. வணங்கான், வாடிவாசல் படத்தில் சூர்யா செய்யப் போகும் சம்பவம்

விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் கூட்டம் பெற்றிருப்பவர் நடிகர் சூர்யா. சமீபகாலமாக சினிமாவில் சூர்யா எடுக்கும் வித்யாசமான முயற்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இவர் நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இவரது ஐந்து நிமிட ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை மிரள விட்டது. அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பாலா உடன் இணைந்த வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ்

Also Read : படப்பிடிப்பிற்கு முன்னரே பல கண்டிஷன் போட்ட சூர்யா.. விழி பிதுங்கி நிற்கும் சிறுத்தை சிவா

இதைத்தொடர்ந்த வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்த எடுக்கப்பட உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் யாரும் எதிர்பார்க்காத புதிய டுவிஸ்ட் உள்ளது. அதாவது வணங்கான் மற்றும் வாடிவாசல் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா வேல், மாற்றான், வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிலும் வாரணம் ஆயிரம் படத்தைப் போல வாடிவாசல் படத்தில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

Also Read : அஜித்,விஜய் 50 படங்களில் செய்யாததை சாதித்துக் காட்டிய சூர்யா.. இனியாவது முடியுமா தளபதி.?

மேலும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி 2024 பொங்கல் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை சூர்யா வாங்கி பயிற்சி பெற்ற வருகிறார். அடுத்தடுத்து சூர்யா தனது பட வேலைகளில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார்.

வணங்கான், வாடிவாசல் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : கல்லா கட்ட வித்தியாசமாக ரிஸ்க் எடுக்கும் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய சிறுத்தை சிவா கூட்டணி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்