கொஞ்சம் கூட மதிக்காத சூர்யா.. மேடையிலேயே தைரியமாக சொன்ன பிரபலம்

கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா-கார்த்தி கூட்டணியில் உருவாகியிருக்கும் 2வது படமான விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு கதாநாயகியாக பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யாவே, தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். விருமன் படத்தில் சினேகன் பாடல் எழுதியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவின் போது பல பிரபலங்கள் மதுரையில் கலந்து கொண்டனர். ஆனால் சினேகன்க்கு, சூர்யாவும் கார்த்தியும் எந்த ஒரு அழைப்பும் கொடுக்கவில்லை. இதனை வேறு ஒரு படத்தின் வெளியீட்டின்போது சினேகன் வெளிப்படையாக கூறி இருந்தார்.

மேலும் பாடலாசிரியருக்கான மரியாதை யாரும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்களும் படத்தில் பணியாற்றி உள்ளேன். எங்களுக்கான அங்கீகாரம் யாரும் கொடுப்பதில்லை. பெரிய நட்சத்திரம் உட்பட அனைவரும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என விருமன் படக்குழு அவமானப்படுத்தியதாக சினேகன் மறைமுகமா கூறினார்.

தற்போது சென்னையில் விருமன் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பேசிய சினேகன் அன்று சூர்யா, கார்த்தி அழைப்பு கொடுக்க வில்லை. ஆனால் இன்று தன்னை கலந்துகொள்வதற்கான அழைப்பை கொடுத்துள்ளார்கள். தனக்கு சந்தோஷமாக இருப்பதாக குத்தி பேசியிருக்கிறார்.

மேலும் தற்போது அழைப்பு வந்தும் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழலில் தான் இருந்தேன். ஆனால் கலந்து கொள்ளாமல் இருந்தால் சினேகன் கோபமாக இருக்கிறார் என மீடியாவில் பேசப்படும் என்பதற்காக கலந்து கொண்டேன் என விருமன் பிரஸ்மீட்டில் தைரியமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -