ரத்தம் தெறிக்க கருடன் பட உன்னி முகுந்தனின் அடுத்த பட போஸ்டர்.. மிரட்டும் மார்கோ

Marko first look poster: நம்ம சினிமாவில் சமீபத்தில் ரிலீசான படங்களில் நேர்மறையான தாக்கத்தை கொடுத்த படங்கள் ஒரு சில தான். அதில் முக்கியமான ஒன்றுதான் கருடன். இந்த படத்தில் வில்லனாக நடித்த உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் மார்கோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

கருடன் படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் இருவருக்குமே சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை எழுதி இருப்பார்கள். அதிலும் செல்வாக்கு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பனுக்கு எதிராக மாறும் உன்னி முகுந்தன் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் உன்னி முகுந்தன் மற்றும் சூரி இருவருக்கும் இடையேயான காட்சி மெய்சிலிர்க்க வைத்திருக்கும். மலையாள சினிமா உலகில் சமீபத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் உன்னி முகுந்தன்.

உன்னி முகுந்தனின் அடுத்த பட போஸ்டர்

சமீபத்திய தமிழ் படங்களில் அக்கட தேசத்தின் நடிகர்களை அழைத்து வந்து வில்லன் கேரக்டரில் நடிக்க வைப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அப்படி ஒரு புதிய முயற்சி கருடன் படத்திற்குள் வந்தவர் தான் உன்னி முகுந்தன்.

மலையாள சினிமாவில் ரிலீசான மல்லிகாபுரம் உன்னி முகுந்தனுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து கருடனும் சூப்பர் ஹிட் அடித்து விட்டது. அதே உற்சாகத்தில் மார்கோ படத்தில் நடித்த முடித்திருக்கிறார் உன்னி முகுந்தன்.

Margo movie poster
Margo movie poster

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது. மலையாள சினிமாவில் சமீப காலமாக ஆக்சன் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அந்த குறையை இந்த படம் கண்டிப்பாக தீர்த்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருடன் படம் பற்றி மேலும் சில செய்திகள்

Next Story

- Advertisement -