சாமியே சைக்கிள்ல போறாரு பூசாரிக்கு புல்லட்டா.? ஓவர் அலும்பு பண்ணும் சூர்யா, தனுஷ்

Suriya-Dhanush: சூர்யாவின் நடிப்பில் இப்போது கங்குவா படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் கிளிம்ஸ் வீடியோ மற்றும் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோன்று தனுஷும் இப்போது கேப்டன் மில்லர் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு டி50 படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஓவர் அலும்பு பண்ணுவதாக ஒரு கருத்து எழுந்துள்ளது. அதாவது கடந்த வாரம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா கிளிம்ஸ் வீடியோ நள்ளிரவு 12.01க்கு வெளியானது. அதேபோன்று இன்று தனுஷின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also read: ரத்தம் தெறிக்க கொலைவெறியோடு வந்த கில்லர்.. ரிலீஸ் தேதியோடு வெளியான கேப்டன் மில்லர் டீசர்

அதை முன்னிட்டு கங்குவா பாணியில் இன்று 12.01க்கு கேப்டன் மில்லர் டீசர் வெளியானது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 15 படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வந்தது. இதுதான் இப்போது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தங்கள் பட ட்ரெய்லர்களை இதுபோன்று நள்ளிரவில் தான் வெளியிட்டு வந்தனர்.

இதற்காகவே அவர்களின் ரசிகர்களும் காத்திருந்து அதை கொண்டாடினார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இதுபோன்று ரசிகர்களை தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் முடிவு செய்து இது போன்ற அலப்பறைகளை எல்லாம் நிறுத்திவிட்டனர்.

Also read: குடுமி, தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தனுஷ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்

ஆனால் இப்போது இருக்கும் நடிகர்கள் தங்கள் பிறந்த நாளை சாக்காக வைத்துக் கொண்டு நள்ளிரவில் டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றை வெளியிட்டு தொழில் ரீதியான போட்டியை தொடங்கி வைத்துள்ளனர். உச்ச நடிகர்கள் எல்லாம் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கும்போது சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்கள் இப்படி அலும்பு பண்ணுவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டாரே இப்போது ஒரு பாட்டு வெளியிட வேண்டும் என்றால் கூட மாலை நேரத்தில் தான் வெளியிடுகிறார். அப்படி இருக்கும் போது தனுஷ், சூர்யா ஏன் ரசிகர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் சாமியே சைக்கிள்ல்ல தான் போறாரு பூசாரிக்கு புல்லட்டு கேக்குதா என இவர்களின் அட்ராசிட்டியை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Also read: யாரு பெஸ்ட்டுன்னு பார்ப்போமா.? கங்குவா பாணியில் வரும் கேப்டன் மில்லர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்