Kanguva-Captain Miller: இந்த வருடம் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்ப இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்ததாக லியோ படத்தை தெறிக்க விடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு இடையில் இந்தியன் 2, ஜப்பான், அயலான், கேப்டன் மில்லர், கங்குவா போன்ற படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
இப்படி அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூண்டி வருகின்றது. அதில் சமீபத்தில் சூர்யாவின் கங்குவா படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் வெளியாகி இருந்தது. சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக நள்ளிரவு 12.01க்கு வெளியான இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவை ஆதிக்கம் செய்து வருகிறது.
Also read: ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்த அட்லீ.. லியோ, கங்குவா ஸ்டைலில் உருவாக்கிய ஜவான் பாடல்
அதில் முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த சூர்யாவை பார்த்து பலரும் அரண்டு தான் போனார்கள். அது மட்டும் இன்றி 3டி தொழில்நுட்பம் கொண்டு பத்து மொழிகளில் வெளியாகும் இப்படம் உலக அளவில் சாதனை படைக்கவும் தயாராகி வருகிறது. இந்நிலையில் இதே பாணியில் கேப்டன் மில்லர் பட குழுவும் ஒரு சம்பவம் செய்ய தயாராகி வருகின்றனர்.
அதாவது வரும் 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளன்று கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளிவர இருக்கிறது. அதுவும் கங்குவா வீடியோ வெளியான மாதிரி 12.01க்கு தான் இந்த டீசரும் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து புது போஸ்டர் ஒன்றையும் வெளியிடுவதற்கு பட குழு தயாராகி வருகிறது.
Also read: சூர்யாவுக்காக சிறுத்தை சிவா செய்த பிரம்மாண்டம்.. ரஜினி, அஜித்தை டீலில் விட இதுதான் காரணம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பீரியட் கால கதைக்களம் ஆகும். இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் வெளியான போஸ்டரும் உச்சகட்ட ஆர்வத்தை உருவாக்கி இருந்தது.
இந்நிலையில் கங்குவா பாணியில் களமிறங்கும் பட குழு அதை ஓவர் டேக் செய்யும் வகையில் டீசரை தயார் செய்திருக்கிறார்களாம். இதன் மூலம் யாரு பெஸ்ட் என நிரூபிக்கவும் அவர்கள் தயாராகி விட்டனர். அந்த வகையில் இந்த இரண்டு வீடியோக்களில் எது ரசிகர்களை பல மடங்கு மிரட்டும் என்பதை நாம் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.