வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரெண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் வேஸ்ட் பண்ண இயக்குனர்.. தலைவர் திமிங்கலம் மாதிரி, நேக்கா கழட்டிவிட்டாரு

Superstar Rajini: இப்போது வேண்டுமானால் இந்த இயக்குனரை போட்டி போட்டுக் கொண்டு டாப் நடிகர்கள் எல்லாம் லாக் செய்கின்றனர். ஆனால், இவரா வேண்டவே வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேக்கா கழட்டிவிட்டார். நெல்சன் திலிப் குமார், லோகேஷ் கனகராஜ் என இளம் இயக்குனர்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து யோசிக்காமல் வாய்ப்பு கொடுக்க கூடியவர்.

அப்படிதான் 2016 ஆம் ஆண்டு ரஜினியின் கபாலி படத்தை பா. ரஞ்சித் இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் தேவையில்லாத டயலாக் எல்லாம் இடம்பெற்றது. சொல்லப்போனால் கபாலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

Also Read: தலைவர் 170 இல் இணைந்த துணிச்சலான இரண்டு கதாநாயகிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைக்கா

இந்த படம் என்னதான் வசூலில் பட்டையை கிளப்பினாலும் ரஜினியின் நடிப்புத் திறமைக்கு தீனி போடக்கூடிய கதை இதல்ல என்று பலரும் விமர்சித்தனர். இருப்பினும் சூப்பர் ஸ்டார் கபாலி படத்திற்கு பிறகு அடுத்த 2 வருடத்தில் வெளியான அவருடைய காலா படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் பா. ரஞ்சித்துக்கு தான் தூக்கி கொடுத்தார்.

இந்த படத்திலும் இடம்பெற்ற வசனங்களும் ரஜினிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அந்த டயலாக் எல்லாத்தையும் படிக்கும் போதே இதெல்லாம் சர்ச்சைக்குரிய அளவுக்கு இருக்குது, நீக்கிவிடுங்கள் என்று சொன்னாராம். 47 வருடமாய் சினிமாவில் திமிங்கலம் போல் வாழ்பவர்.

Also Read: 500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்

ஏற்கனவே கபாலி படத்தில் இதே போன்ற வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தது என்று திட்டி இருக்கிறார். காலா படத்தில் பா. ரஞ்சித்திடம் படத்தைக் குறித்து நிறைய கரெக்ஷன் சொன்னாராம்.  ஆனால் அவர் ரஜினி சொல்வதை எதையும் கேட்காமல் தன்னுடைய போக்கில் தான் படத்தை எடுத்திருக்கிறார்.

யாருக்கும் கிடைக்காத இந்த இரண்டு படத்தின் வாய்ப்பையும் அவர் சரியாக யூஸ் பண்ணிக்கல. அதன் பின்பு பா. ரஞ்சித்துக்கு குட் பாய் சொல்லிட்டு, இனிமேல் நிச்சயம் அவருடன் படம் பண்ண கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உறுதியுடன் இருக்கிறார்.

Also Read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

- Advertisement -

Trending News