ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தலைவர் 170 இல் இணைந்த துணிச்சலான இரண்டு கதாநாயகிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைக்கா

Thalaivar 170: இப்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தலைவர்170 படத்தை பற்றிய அப்டேட் எப்போது வரும் என்பது தான். அதாவது ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்போது ஜெய் பீம் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி தனது 170 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகள் யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது.

Also Read: 500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்

கிட்டத்தட்ட 650 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்த நிலையில் இந்த வெற்றி சூட்டுடன் ரஜினி தனது அடுத்தடுத்த படங்களிலும் பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் துசாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read: இருக்குற இடமே தெரியாமல் போன 80ஸ் ஹீரோக்கள்.. ரஜினி அளவுக்கு வந்திருக்க வேண்டிய நடிகர்

இந்த இரு நடிகைகளுமே துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்கள். அந்த வகையில் மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் துஷாரா விஜயன் நடிப்புக்கு சிறந்த தீனி போட்ட படம் சார்பட்டா பரம்பரை.

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் இவர்கள் இருவரும் இப்போது தலைவர் 170 நடிப்பதால் கண்டிப்பாக வெயிட்டான கதாபாத்திரம் தான் இவர்களுக்கு கொடுக்கப்படும். மேலும் மற்ற பிரபலங்கள் யார் யார் இந்த படத்தில் இணைவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

Also Read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

- Advertisement -

Trending News