ஆக்டிங் ஸ்கூலில் ரஜினியுடன் சேர்ந்து படித்த 5 நடிகர்கள்.. இப்பவும் அடிக்கடி ரகசியமாய் சந்திக்கும் சூப்பர் ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடத்துனராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் சென்னை வந்து நடிப்பு பள்ளியில் சேர்ந்தார். அப்போது அவருடன் படித்தவர்களில் பல முக்கிய நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றளவும் நட்புடன் பழகி வருவதோடு, அவர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார்.

சிரஞ்சீவி: தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் சிரஞ்சீவி. நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். பத்மபூஷன் விருதை பெற்றதோடு, 7 முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். ரஜினிகாந்தும், சிரஞ்சீவியும் ஆக்டிங் ஸ்கூலில் ஒன்றாக படித்ததோடு, காளி மற்றும் மாவீரன் படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.

Also Read: இளையராஜாவை வெறுத்த ரஜினி.. 28 வருடங்களாக ஒதுக்கி வைத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!

அம்பரீஷ்: கர்நாடக சினிமா இண்டஸ்ட்ரியில் டாப் ஸ்டாராக இருந்தவர் தான் அம்பரீஷ். நடிகராக மட்டுமில்லாமல் மிகப்பெரிய அரசியல்வாதியாகவும் இருந்தவர். மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். பிலிம்பேர் விருதுகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வாங்கியிருக்கிறார். இவரும் சூப்பர் ஸ்டாருடன் ஆக்டிங் பள்ளியில் படித்தவர் தான்.

தியாகு: நடிகர் தியாகு சினிமாவில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தவசி, நரசிம்மா, சாமி, சந்திரமுகி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவருக்கு இயக்குனர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தர் நிறைய வாய்ப்புகளை கொடுத்தார்.

Also Read: இப்பவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஜினியின் 10 படத்தின் வசனங்கள்.. அவரே எழுதி அதிரடி காட்டிய பஞ்ச் டயலாக்

ஜெகபதி பாபு: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் ஜெகபதி பாபு. மூன்று முறைகளுக்கும் மேலாக பிலிம்பேர் விருதுகளை இவர் வாங்கியிருக்கிறார். சைமா அவார்ட்ஸ், IIFA அவார்ட்ஸ் என பல விருதுகளை வாங்கி குவித்த இவர் நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் சேர்ந்து நடித்தார்.

செந்தாமரை: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவர் நாடக கலைஞராக இருந்தவர். MGR, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் , பாக்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்திருக்கிறார். ரஜினிகாந்தின் மூன்று முகம் படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read: பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

Next Story

- Advertisement -