சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெள்ளி விழா கண்ட 5 படங்கள்.. முதல் படமே 400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை!

சுந்தர்ராஜன் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். சுந்தர்ராஜன் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே 425 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சுந்தர்ராஜன் இயக்கிய குறுகிய காலத்திலேயே வெள்ளி விழா கண்ட திரைப்படங்களை பற்றி தற்போது பார்ப்போம்.

பயணங்கள் முடிவதில்லை: சுந்தரராஜன் இயக்குனராக அறிமுகமான முதல் படம் பயணங்கள் முடிவதில்லை. இப்படத்தில் மோகன் மற்றும் பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். சுந்தர்ராஜன் வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது பயணங்கள் முடிவதில்லை. ஏனென்றால் அறிமுகமான முதல் படமே வெள்ளிவிழா கண்டு அவருக்கு என ஒரு தனி அடையாளத்தை பதித்தது.

அம்மன் கோயில் கிழக்காலே: அம்மன் கோயில் கிழக்காலே திரைப்படத்தில் விஜயகாந்த், ராதா மற்றும் ஸ்ரீவித்யா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படமும் சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்களில் குறுகிய காலத்திலேயே வெள்ளிவிழா கண்டு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

amman kovil kizhakale
amman kovil kizhakale

நான் பாடும் பாடல்: சிவக்குமார், அம்பிகா, மோகன், சரத் பாபு மற்றும் பாண்டியன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் நான் பாடும் பாடல். இந்த படத்தில் சிவகுமார் மற்றும் மோகன் இருவரும் இணைந்து நடித்து மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சிவகுமார் வாழ்க்கையிலும் மோகன் வாழ்க்கையிலும் இப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

naan padum padal
naan padum padal

வைதேகி காத்திருந்தாள்: விஜயகாந்த் மற்றும் ரேவதி போன்ற பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். இப்படத்தில் கவுண்டமணி ஆல் இன் ஆல் அழகுராஜா எனும் கதாபாத்திரம் நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார். அதே போல் செந்தில் கோமுட்டி தலையா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்கும் பாராட்டையும் பெற்றார். இப்படம் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது. இப்படம் சுந்தரராஜனுக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது.

vaidehi-kathirunthal
vaidehi-kathirunthal

ராஜாதி ராஜா: ரஜினிகாந்த், ராதா, நதியா, வினுசக்கரவர்த்தி, ராதாரவி, ஜனகராஜ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராஜாதிராஜா. இப்படத்தில் வரும் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நதியா மற்றும் ராதா நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை சுதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

rajadhi raja
rajadhi raja

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -