ரொம்பவும் எல்லை மீறி போறீங்க.. பிட்டு படத்தை மிஞ்சிய சன் டிவி சீரியல்!

90 கிட்ஸ்களுக்கெல்லாம் கோலங்கள், சித்தி என குடும்ப சீரியல்களை போட்டுக் காண்பித்த சன் டிவி, தற்போது 2k கிட்ஸ்களுக்கு கவர்ச்சியின் உச்சத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சன் டிவியில் தினம் தோறும் இரவு 8.30 மணிக்கு குடும்பமே சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில் கண்ணான கண்ணே என்ற நெடும் தொடரை பார்ப்பதை வழக்கமாக சிலர் வைத்திருக்கின்றனர்.

இதில் காதலித்து திருமணம் செய்துகொண்ட கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் இருவரும் ரொமான்ஸில் எல்லைமீறிய காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இது பிட்டு படத்தை விட மோசமாக இருக்கிறது என சோஷியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்கள் காட்டமாக கமெண்ட் செய்துள்ளனர்.

சீரியல் ரசிகர்களிடம் சன் டிவி சீரியல் அனைத்தும் பிரபலமானது என்பதால், அதை குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற கவர்ச்சி காட்சிகளை எல்லாம் வைப்பது அவர்களது மனதை கெடுப்பது போல் இருக்கிறது.

இப்படிப்பட்ட காட்சிகளால் குழந்தைகளின் மனதில் தவறான எண்ணம் ஏற்படுவதுடன், சமூக பொறுப்பில்லாமல் சன் டிவி எல்லை மீறி, குடும்ப சீரியல்களில் காண்பித்திருப்பது பலரது தங்களது கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.

சுமார் 500 எபிசோடுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகள், கணவரிடம் அந்தப் பாசம் கிடைக்கும்போது பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்.

suntv-serial
suntv-serial

அதை இப்படியெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேறு கோணத்திலும் கண்ணியமாக காட்டி இருந்திருக்கலாம். அப்படி செய்யாமல் சீரியலின் இயக்குனர் டிஆர்பியை ஏற்றுவதற்கு படுமோசமான கவர்ச்சி காட்சிகளை கண்ணான கண்ணே சீரியலில் வைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

Next Story

- Advertisement -