எதிர்நீச்சல் 2 பிள்ளையார் சுழி போடும் ஜீவானந்தம்.. கிரீன் சிக்னலால் ஹாப்பி மூடில் டீம் போடும் ஆட்டம்

Ethirneechal: திடீரென அறிவிக்கப்படாமல் மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் எதிர்நீச்சலுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார் திருமுருகன். யாரும் எதிர்பார்க்காமல் 10 நாட்களில் எதிர்நீச்சல் சீரியல் முடியப்போகிறது என அறிவிப்பு வந்தது. இது எதிர்நீச்சல் டைரக்டர் மற்றும் நடிகரான ஜீவானந்தத்துக்கே அதிர்ச்சி தான்.

சன் டிவி, ஏன் சீரியலை திடீரென முடிக்கும்படி கட்டளை போட்டது என்று தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து ( பழைய குணசேகரன்) மரணமடைந்ததிலிருந்து டிஆர்பி யில் பெரிய அளவில் போகவில்லை.

மாறாக விஜய் டிவி, ஜெயா டிவி என அந்தந்த சேனல்கள் டிஆர்பி யில் சன் டிவியை துவம்சம் செய்தது. எல்லாத்துக்கும் காரணம் எதிர்நீச்சல் சீரியலின் சுவாரஸ்யம் கம்மியானது மற்றும் அந்த “பிரைம் டைம்” எனப்படும் ஒளிபரப்பும் நேரம் தான். இதனால் எதிர்நீச்சல் முடிய போகிறது என தற்காலிகமாக ஒரு வதந்தியை கிளப்பிவிட்டனர்.

கிரீன் சிக்னலால் ஹாப்பி மூடில் டீம் போடும் ஆட்டம்

உண்மையாகவே இப்பொழுது எதிர்நீச்சல் சீரியல் முடிந்தும் விட்டது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கவிருக்கிறது. 1500 எபிசோடுகளை கையில் வைத்திருக்கிறார் ஜீவானந்தமாகிய திருமுருகன். இது சன் டிவி செய்யும் ஒரு ராஜதந்திரம்.

எதிர்நீச்சல் 2 கூடிய விரைவில் பிள்ளையார் சுழி போடுகிறார் திருமுருகன். அதற்கான எல்லா வேலைகளையும் முடித்து விட்டார் ஜீவானந்தம். சன் டிவியும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டது. இனிமேல் இதுதான் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்றும் மேலிடம், கட்டளை போட்டிருக்கிறது.

இதனால் எதிர்நீச்சலின் மொத்த நடிகர்களும் குஷி மூடில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த எபிசோடில் டபுள் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறார் இயக்குனர். அடுத்த எபிசோடில் வில்லன் குணசேகரன் இல்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜீவானந்தம். இந்த நாடகத்திற்காக புதிய வில்லனை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார் ஜீவானந்தம்.

Next Story

- Advertisement -