முதல் முறையாக சன் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கி விஜய் டிவி.. அனல் பறக்கும் டாப் 10 சீரியல்கள்

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வர டிஆர்பி ரேட்டிங் வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் கடந்த வாரம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சன் டிவி சீரியல்களை தெரிந்து ஓட வைத்திருக்கிறது விஜய் டிவி சீரியல்கள். ஆனால் டாப் இரண்டு இடத்தை சன் டிவியின் கயல் மற்றும் சுந்தரி சீரியல் தான் பிடித்திருக்கிறது.

Also Read: இந்த வார டாப் லிஸ்டில் இருக்கும் 10 சீரியல்கள்.. ஆண்டவருக்கே ஆட்டம் காட்டிய சன் டிவி

3-வது இடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கும், 4-வது இடம் பாரதிகண்ணம்மா சீரியலுக்கும் கிடைத்துள்ளது. 5-வது இடம் மீண்டும் சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் பெற்றுள்ளது.

6-வது இடம் விஜய் டிவியின் கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை வெளிக்காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றுள்ளது. 7-வது இடம் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலும், 8-வது இடம் ஆனந்த ராகம் சீரியலும் பெற்றுள்ளது.

Also Read: ஆட்டம் கண்ட டாப் சீரியல்.. டிஆர்பியால் விஜய் டிவி எடுத்த அதிரடி

9-வது இடம் அதே சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கும், 10-வது இடம் ரோஜா சீரியலுக்கு கிடைத்துள்ளது. ஆனால் வழக்கம் போல் ரோஜா சீரியல் எப்போதுமே டாப் 5 இடத்தில் இருக்கும் நிலையில், இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பது சிலரை அதிர்ச்சியை வைக்கிறது

ஆனால் கடந்த சில நாட்களாக ரோஜா சீரியலில் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் இப்படிப்பட்ட பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். அத்துடன் முதல் முறையாக இந்த முறை விஜய் டிவியின் ஆதிக்கம் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் அதிகமாக இருப்பதால் சன் டிவி சீரியல்கள் ஆட்டம் கண்டிருக்கிறது.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

Next Story

- Advertisement -