ஆடு உறவு குட்டி பகையா.! அதிதி மீது கடும் கோபத்தில் வாரிசு நடிகை

பாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை நெப்போடிசம் இருப்பதாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாக அறிமுகமான படத்திலேயே ஒரு பாடலையும் பாடியுள்ளார். அந்த பாடல் தற்போது இளசுகள் முணுமுணுக்கும் பாடலாக அமைந்துள்ளது. படத்தின் புரமோஷனில் அதிதியை தூக்கி வைத்து தான் எல்லோரும் பேசினார்கள். இதனால் வாரிசு நடிகை ஒருவர் அதிதி மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : அதிதிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உண்மையிலேயே இது ஷங்கர் மகளாக இருப்பதால் வந்த அந்தஸ்து

அதாவது பாடகி, இசையமைப்பாளர், நடிகை என கமலின் மூத்த வாரிசாக சினிமாவில் நுழைந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் வந்த புதிதில் சினிமாவில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். ஆனால் தற்போது இருக்கிற இடம் கூட தெரியாமல் தொடர் தோல்விப் படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமா அதிதி ஷங்கரை புகழ்ந்து பேசி வருவதால் ஸ்ருதிஹாசனுக்கு ஈகோ வந்ததாக கூறப்படுகிறது. நாமும் நடிகையாகவும், பாடகியாகவும் தான் சினிமாவில் நுழைந்தோம். ஆனால் நம்மை தமிழ் சினிமா ஒதுக்கி வைத்த அதிதியை தூக்கி வைத்து பேசுவதாக ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Also Read : இரண்டு நோயினால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்.. போதை பழக்கத்தினால் ஏற்பட்ட துயரம்

ஆனால் ஸ்ருதிஹாசனின் தோழிகள் அவரிடம் வந்த புதிதில் உனக்கும் இதெல்லாம் கிடைத்தது, அதேபோல் தற்போது அதிதி ஷங்கரையும் பெருமை பேசுகிறார்கள். திறமை இருந்தால் மட்டுமே அவரால் சினிமாவில் நீடிக்க முடியும் என ஸ்ருதிஹாசனுக்கு ஆறுதல் கூறி உள்ளனர்.

இப்போதுதான் கமலஹாசன் மற்றும் ஷங்கர் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆடு உறவு குட்டி பகை என்பது போல அப்பாக்கள் ஒற்றுமையாக இருந்தாலும் மகள்கள் இடையே ஈகோ பிரச்சனை வந்துள்ளது.

Also Read : கமல் இல்லாமல் தொடங்கும் படப்பிடிப்பு.. ஏழரை முடிஞ்சி பெருமூச்சு விட்ட இயக்குனர்!