வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கமல் இல்லாமல் தொடங்கும் படப்பிடிப்பு.. ஏழரை முடிஞ்சி பெருமூச்சு விட்ட இயக்குனர்!

இயக்குனர் ஷங்கர்-உலக நாயகன் கமலஹாசன் கூட்டணியில் துவங்கப்பட்ட இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு ஆந்திரப் பகுதியில் தொடங்கப்பட்டு அதன் பிறகு, சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்த விபத்தினால் மூன்று உதவி இயக்குனர்கள் மரணமடைந்தனர்.

அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது.

Also Read: இந்தியன் 2-க்கு வந்த தலைவலி!

அதன் பிறகு இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்படுகிறது.

இதில் உலகநாயகன் கமலஹாசன் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்குகின்றனர். அதன் பிறகு கமல் படப்பிடிப்பில் இணைவார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திலும் கமல் பட்டையைக் கிளப்ப காத்திருக்கிறார்.

Also Read: கொடூர வில்லனாக கலக்கிய கமல்ஹாசன் படங்கள்!

அடுத்த வாரத்தில் சென்னையில் துவங்கப்பட இருக்கிற இந்தியன்2 படத்திற்கான படப்பிடிப்பில் கமலஹாசனை தவிர நடிகர் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்தப் படத்திற்கான 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டது.

மீதமிருக்கும் 30% காட்சிகளை விரைவில் எடுத்து முடிக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு செயல்படுகிறார். ஏற்கெனவே சென்னையில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது தான் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஆன நிலையில், மீண்டும் இந்தியன் 2 படத்திற்கு ராசி இல்லாத சென்னையில் மறுபடியும் படப்பிடிப்பை வைத்துள்ளார்களே என சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

Also Read: இந்தியன் 2 படத்திற்கு சாதகமாய் முடிந்த கெட்ட நேரம்!

- Advertisement -

Trending News