அதிதிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உண்மையிலேயே இது ஷங்கர் மகளாக இருப்பதால் வந்த அந்தஸ்து

தற்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் அதிதி பற்றிய பேச்சுதான். விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒரே படத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் அதிதி, ‘மதுர வீரன்’ என்ற பாடலை பாடி உள்ளார். அந்த பாடல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அதிதி ஷங்கர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்தப் பாடலை எனர்ஜி குறையாமல் பாடி, ரசிகர்களை ஆட்டம் போட வைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒரே ஒரு படத்தில் நடித்ததற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கிறதா அல்லது இதெல்லாம் ஷங்கர் மகளாக இருப்பதால் வந்த அதிஷ்டமான சிலர் அதிதியை விமர்சிக்கின்றனர். ஆனால் விருமன் படம் தன்னுடைய திறமையால் வந்த வாய்ப்பு. ஷங்கர் மகள் என்பதால் வாய்ப்பு வரவில்லை என்று அதிதி பலமுறை சொல்லியிருக்கிறார்.

இருப்பினும் அவருக்கு தற்போது அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுகிறது. விருமன் படம் ஓடுது, ஓடவில்லை என்பதெல்லாம் மேட்டர் இல்லை.ஏனென்றால் பிரபல இயக்குனரான ஷங்கருடைய அசிஸ்டண்ட் டைரக்டர் பலபேர் இருக்கின்றனர்.

எல்லோரும் அதிதி ஷங்கரிடம் கதை சொல்லி வருகின்றனர். அதில் ஏதாவது மூன்று படத்தை அதிதி ஷங்கர் ஓகே பண்ணினால் போதும். ஆகையால் இன்னும் 5 வருடத்திற்கு படம் கையில் இருக்கும் தெனாவட்டில் அதிதி வலம் வருகிறார்.

மேலும் விருமன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் கூடிய விரைவில் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு அதிதி அசால்டாக ஜோடி சேரப்போகிறார்.

- Advertisement -