ரஜினியுடன் மீண்டும் சேரப்போகும் தனுஷ்.. இளையராஜா போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா

நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை 18 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு 2 மகன்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வருடம் இவர்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.

தனுஷ் விவாகரத்து செய்தது முதல், அவர் நடித்த பல திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்தது. மேலும் தனுஷின் மரியாதை தமிழ் சினிமாவில் சற்று குறைந்தே காணப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியான நிலையில் இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு வெகுவாக பாராட்டப் பெற்றது.

Also Read: ஒரு நாள் வசூலுக்காக மணிரத்தினத்தை டார்கெட் செய்யும் செல்வராகவன்.. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

இதனிடையே தனுஷ் மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்க ஆயத்தமாகி வரும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாட உள்ளார் என்ற தகவல் வெளியானது.

மேலும் இத்திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் உருவாகப் போவதாக அண்மையில் தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

Also Read: சறுக்கலையே சந்திக்காத 5 மெகா ஹிட் இயக்குனர்கள்.. ரஜினி முதல் தனுஷ் வரை காத்து கிடக்கும் ஒரே டைரக்டர்

இதனிடையே நடிகர் தனுஷும் விடுதலை திரைப்படத்தில் பாடல் பாட உள்ள நிலையில், மாமனாரும்,மருமகனும் ஒரே திரைப்படத்தில் வேலை செய்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தனுஷ் பாடும் அதே திரைப்படத்தில் பாடல் பாடுவது ரஜினிக்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம்.

இதனிடையே மன்னன் திரைப்படத்திற்குப் பின்பு ரஜினிகாந்த் தற்போது இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று இத்திரைப்படத்தில் பாடல் பாட ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ், தனது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஜினிகாந்தும்,தனுஷும் ஒரே படத்தில் பாடுவதால் இவர்கள் இருவரும் இணைவது பிற்காலத்தில் உறுதியாகும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: வியாபாரத்தில் தனுஷ் சந்தித்த பெரிய அடி.. எல்லோரையும் ஓரங்கட்டி No.1 இடத்தை பிடித்த நடிகர்