ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே!

Small screen celebrities Thala Diwali: வெள்ளிதிரையை போலவே இந்த வருடம் சின்னத்திரைையிலும் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் அதிகம். அவர்களெல்லாம் இன்று தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்களின் லிஸ்ட்டை பார்த்தால் பெருசா போய்க்கிட்டே இருக்கிறது.

பிரியங்கா நல்காரி- ராகுல் வர்மா: ரோஜா சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. இவருக்கும் ராகுல் என்ற மலேசியா தொழிலதிபருக்கும் திடீரென திருமணம் நடந்தது. மலேசியாவில் உள்ள கோயிலில் குடும்பத்தினர் இல்லாமல் இவர்கள் மட்டுமே எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். ஏனென்றால் அந்த சமயத்தில் வீட்டில் அவ்வளவு பிரச்சனைகள் நிலவியது தான். இப்போது இரு வீடுகளும் சமாதானம் ஆகியுள்ள நிலையில், இந்த ஜோடி இன்று மகிழ்ச்சியாக தங்களது தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.

நாஞ்சில் விஜயன்- மரியா: சர்ச்சைக்கு பெயர் போன சின்னத்துரை பிரபலம் தான் நாஞ்சில் விஜயன். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பேமஸானார். இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டு மிக எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்தது. இந்த ஜோடியும் இன்று தான் தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.

பாரதிகண்ணம்மா அகிலன்- அக்ஷயா: பாரதிகண்ணம்மா சீரியலில் அகிலன் கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் புஷ்பராஜ். இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாதியில் இருந்து வெளியேறினார். இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரக்கூடிய கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான அக்ஷயாவை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இன்று தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.

Also Read: இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்.. அடேங்கப்பா இத்தனை ஜோடிகளா!

அன்பரசி- வசந்தன்: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் தோழியாகவும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அபி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர்கள் நடிகை அன்பரசி. இவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் வீரமணி முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.

ஷிமோனா- கிரண்: நடிகை ஷிமோனா சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் அறிமுகமாகி, அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியலிலும் நடித்து பிரபலமானவர். இவர் கோவையில் கிரண் என்பவரை கடந்த மாத இறுதியில் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இன்று இவர்கள் தல தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

கார்த்திகை தீபம் ஹர்திகா: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர்தான் ஹர்திகா. இவர் கடந்த 9ம் தேதி அவருடைய குடும்பம் வழக்கத்தின் படி, கேரளாவை சேர்ந்த தன்னுடைய காதலனை கரம் பிடித்தார். இன்று தான் இவருக்கு தல தீபாவளி.

Also Read: குணசேகரன் திட்டத்தை தவடு பொடியாக்கிய தோழர்.. இனி மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்

- Advertisement -

Trending News