சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் கூடிய விறுவிறுப்புடன் கதை நகர்ந்து வருகிறது. குணசேகரனின் வறட்டு கௌரவத்தால் எஸ்கேஆர் ஐ அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஆதிரை திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.
இன்னொரு பக்கம் ஜனனி, குணசேகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆதிரை நினைத்தபடி திருமணத்தை நடத்தி வைப்பதற்கு போராடுகிறார். ஆனால் இது ரெண்டுமே நடக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் அருண் மறைமுகமாக ஜீவானந்தம் கஸ்டடிக்கு போய் விடுகிறார்.
Also read: ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி
ஆனாலும் கௌதம் மட்டும் அப்படி பண்ணி விட்டால் ஜனனிக்கு நம்பிக்கை துரோகம் செய்த மாதிரி ஆகிவிடும். மேலும் ஜீவானந்தம் கேரக்டர படி அருணை வைத்து எஸ்கேஆர் குடும்பத்தை பிளாக்மெயில் பண்ணப் போகிறார். அடுத்ததாக அருணை காணவில்லை என்பதற்காக எஸ்கேஆர் குடும்பம் குணசேகரன் மேல் சந்தேகப்பட்டு போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.
அவர்களும் குணசேகரனுக்கு போன் பண்ணி எஸ் கே ஆர் இடத்திற்கு வந்துட்டு போக சொல்கிறார். பிறகு ஜனனி பிளான் படி ஆதரையை வெளிய கூட்டிட்டு போய் அருணுடன் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று குணசேகரனின் அம்மாவிடம் சொல்கிறார். அத்துடன் நாங்கள் வெளியே போவதற்கு நீங்கதான் குணசேகரன் நம்புற மாதிரி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கிறார்.
Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை
ஜனனி பிளான் பண்ண படி ரிசப்ஷன் கரிகாலன் உடன் நடந்த பின்பு மறுநாள் கல்யாணம் நடக்கும்பொழுது ஆதரியை கூட்டிட்டு திருட்டுத்தனமாக கோவிலுக்கு போகப் போகிறார்கள். ஆனால் இவர் எதிர்பார்த்தபடி கௌதம், அருணை கூட்டிட்டு வருவாரா என்பது தான் சந்தேகமாக இருக்கிறது.
ஜீவானந்தம் வந்தாலும் இந்த ஆதிரையை வைத்து இழுக்குற சீனு மட்டும் போய்க் கொண்டே இருக்கிறது. இந்த ஆதிரையின் காதல் திருமணம் ஜவ்வு மாதிரி இழுத்து எங்களைப் போர் அடித்தது போதும். தயவு செய்து இனிவரும் எபிசோடுகளில் ஜீவானந்தத்தை வைத்து கதையே விறுவிறுப்பாக கொண்டு போனால் ரொம்ப சந்தோசம். பார்க்கலாம் எப்படி ஒவ்வொரு நாளும் ட்விஸ்டாக அமையப் போகிறது என்று.
Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு