சிவக்குமார் வில்லனாக நடித்த ஒரே படம்.. கமல் கைவிட்ட மோசமான கதாபாத்திரம்

Sivakumar Performed villan Character: 1977 வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி” என்ற படத்தில்  டைரக்டர் எஸ் பி முத்துராமன் சிவக்குமாரை வில்லனாக நடிக்க வைத்து ரசிகர்கள் அனைவரின் முகத்திலும் ஆச்சரியக்குறியை படர விட்டிருப்பார். சிவக்குமார் வில்லனாக நடித்த ஒரே படம் இதுதான்.

70களில் “அவள் ஒரு தொடர்கதை, புவனா ஒரு கேள்விக்குறி” என்று பெண்களை மையப்படுத்தி கதைகளாக கொண்ட படங்கள் பல வெற்றி படங்களாக அமைந்தன. காதலித்து ஏமாற்றப்படும் பெண்ணை கருவாகக் கொண்டு இப்படம் தயாரானது.

சாக்லேட்பாய் யாக இருக்கும் சிவக்குமார் பெண்களை ஏமாற்றும் நாகராஜ் வேடத்திலும், ரஜினி காதலியை இழந்த சோகத்தில் நண்பனுக்காக புவனாவை கரம் பிடிக்க வரும் சம்பத்தாகவும், சுமித்ரா-புவனவாகவும் நடித்திருந்தனர்.

Also Read:அலப்பறை தாங்காமல் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சிவக்குமார்.. ஓவரா கூவியதால் துவம்சம் செய்த சூர்யா

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில், இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்துமே ஹிட். சிவக்குமாரின், நாகராஜ் கதாபாத்திரம் வரும் ஒவ்வொரு இடங்களிலும்  பின்னணியில் மகுடி இசையை புகுத்தி இருப்பார். “ராஜா என்பார் மந்திரி என்பார்” பாடலில் முழு கதையையும் விலக்கி இருப்பார்.

கமல் நடிக்க இருந்த சம்பத் கேரக்டரில் அவர் விலகியதை தொடர்ந்து  சிவக்குமார் அந்த கேரக்டருக்கு பிக்ஸ் செய்யப்பட்டது. படப்பிடிப்பு துவங்க ஒரு வார காலத்திற்கு முன்பு எஸ் பி முத்துராமன் அவர்கள் ரஜினியை ஒரேடியாக வில்லனாக காட்ட வேண்டாம் என்று முடிவு எடுத்து சிவக்குமாரிடம் வில்லன் கதாபாத்திரம் ஏற்க பேசப்பட்டது. ஹீரோ இமேஜில் நல்ல மார்க்கெட் உடன் இருந்த சிவகுமார் வில்லனாக ஒத்துக்கொண்டதை  அடுத்து சிவக்குமார் மற்றும் ரஜினியின் கேரக்டர்ஸ் எக்ஸ்சேஞ்ச் செய்யப்பட்டது.

அந்தகாலத்தில் ஹீரோவாக இருக்கும் ஒருவர் வில்லன் பாத்திரம் ஏற்பது துணிச்சலான ஒன்று. “கல்லுக்குள் ஈரம் இல்லை, நெஞ்சுக்குள் இரக்கம் இல்லை, பைத்தியம் தீர வைத்தியம் இல்லை”  என்று இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இரக்கமற்ற வில்லனாக நடித்து இப்படத்தை வெற்றி படமாக மாற்றி இருப்பார்.

Also Read:நடிக்க தெரியாமல் பராக் பார்த்த நடிகை.. கெட்ட வார்த்தையால் திட்டித் தீர்த்த நடிகர் சிவக்குமார்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்