அலப்பறை தாங்காமல் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சிவக்குமார்.. ஓவரா கூவியதால் துவம்சம் செய்த சூர்யா

Actor Suriya: சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட பத்து மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதே நாளில் மற்றொரு கோர சம்பவமும் நடைபெற்றது.

அதாவது சூர்யாவுக்கு மிகப்பெரிய பேனர் வைப்பதில் இரண்டு பேர் இறந்து விட்டனர். இந்த சோகத்தில் இருந்து சூர்யா மீள்வதற்குள் மதுரையில் மிகப்பெரிய பேனர் ஒன்றில் வருங்கால முதல்வர் சின்னவர் சூர்யா வாழ்க என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதனால் சினிமா மற்றும் அரசியல் கலம் இரண்டுமே ஆடிப் போய்விட்டது.

Also Read : கட் அவுட் பிரச்சனையில் முளைத்த திடீர் திருப்பம்.. அஜித்தை பாலோ செய்யும் சூர்யா

இதைத்தொடர்ந்து சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் தனது மகனைக் கூப்பிட்ட லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். அதாவது சூர்யா சினிமாவை தாண்டி பல உதவிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகிறார். பெரும்பாலான விஷயங்களை அவர் வெளிப்படையாக செய்வதற்கான காரணம் தன்னை பார்த்து மற்றவர்களும் இதே போன்ற உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.

விஜய் கூட தற்போது அரசியலில் நுழைவதற்காக மாணவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். ஆனால் சூர்யாவை பொருத்தவரையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆரம்பம் முதலே அகரம் பவுண்டேஷன் மூலம் தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

Also Read : சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

மேலும் இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை கண்டிக்க வேண்டும் இல்லையென்றால் நன்றாக இருக்காது என சிவக்குமார் சூர்யாவிடம் டோஸ் விட்டு இருக்கிறார். சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஓவராக கூறியதால் வந்த விளைவு தான் இது அனைத்தும். இதனால் சூர்யாவுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனாலும் சூர்யா தனது ரசிகர்களை அழைத்து இனி பேனர், போஸ்டர் இதுபோன்று ஒட்டக்கூடாது என ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதையும் மீறி சிலர் ஆர்வக்கோளாறில் இவ்வாறு நடந்து கொண்டு சூர்யாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த முறை சற்று கடுமையாகவே சூர்யா தனது ரசிகர்களிடம் இந்த விஷயத்தை கூறியிருக்கிறாராம்.

Also Read : ஏழாம் அறிவா, காஷ்மோராவா.? கங்குவா கெட்டப்புக்காக ரிஸ்க் எடுத்த சூர்யா.. ஊறுகாய் போல் பயன்படுத்திய சிவா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்