டான் கூட்டணியில் மீண்டும் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. நடிப்பு அரக்கனுடன் மோதல், கிரஷ் நடிகையுடன் காதல்

Sk 24: வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதை கெட்டியாக பிடித்துக் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வர வேண்டும் என்று சிவகார்த்திகேயனை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்குள் 20 படங்களுக்கு மேல் நடித்து அடுத்தடுத்து வாய்ப்புகளை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல் தயாரிப்பில் வித்தியாசமான கேரக்டரில் மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் கதையில் நடிக்கும் விதமாக அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று மும்மரமான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் Sk 23வது படத்திற்கும் கமிட்டாகி விட்டார்.

ஒரு பக்கம் கிரஷ் இன்னொரு பக்கம் அரக்கன்

அதாவது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் என் வி பிரசாத் தயாரிப்பில் எஸ்கே கமிட் ஆகி இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் இணைந்து இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இன்னும் கூடிய விரைவில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது.

இப்படி இரண்டு படங்கள் வரிசை கொண்டு இருக்கும்போது அடுத்த படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன் மாபெரும் வெற்றியை கொடுத்த டான் படத்துடன் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய நண்பர் மற்றும் இயக்குனருமான சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் SK24 படத்திற்கு கமிட் ஆகிவிட்டார்.

இப்படத்திற்கு டைட்டில் பாஸ் என்று வைத்திருக்கிறார்கள். இதில் நடிப்பு அரக்கனுடன் மோதும் வகையில் எஸ்ஜே சூர்யா கமிட்டாகி இருக்கிறார். தற்போது வரும் படங்களில் இவருடைய வில்லத்தனம் இல்லாமல் எந்தப் படங்களும் இல்லை என்பதற்கு ஏற்ப எஸ்ஜே சூர்யா படத்திற்கு படம் வில்லத்தனத்தை காட்டி மிரட்டுகிறார். அந்த வகையில் எஸ் கே 24 படத்தில் எஸ்ஜே சூர்யா மிரட்டப் போகிறார்.

மேலும் இந்த கூட்டணியில் கிரஷ் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகி இருக்கிறார். இந்த கூட்டணியில் ஆரம்பமாகும் படத்திற்கு பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கப் போகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் தான் படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் உருவாகி உள்ள இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி கூட்டணியாக இருக்கும்.

SK நடிக்கும் படத்தின் அப்டேட்டுகள்

Next Story

- Advertisement -