விஜய் இடத்தை பிடிக்க தீயா வேலை செய்யும் SK.. தளபதி 69க்கு பிறகு எச் வினோத் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்

Vijay-SK: விஜய் தன்னுடைய மக்கள் பணிகளுக்கான வேலையை ஆரம்பித்து விட்டார். அவருடைய ஒவ்வொரு நகர்வும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் கோட் படத்திற்கு பிறகு இவரின் அடுத்த படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏனென்றால் இப்படத்துடன் அவர் சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார். அதனாலயே இப்போது டாப் ஹீரோக்கள் இவருடைய இடத்தை பிடிப்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயன் தன்னுடைய டார்கெட் அதுதான் என்பது போல் ஒவ்வொரு விஷயங்களையும் கவனத்துடன் செய்து வருகிறார்.

அதன்படி தற்போது அவர் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து ஏ ஆர் முருகதாசுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் இணைகிறார்.

இப்படி பிசியாக இருக்கும் அவர் அடுத்ததாக எச் வினோத்துடன் இணைவது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்களுடன் இணைந்தால் தான் விஜய் இடத்தை பிடிக்க முடியும் என தெரிந்து வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்த எச் வினோத்

அதன்படி இவர்களின் கூட்டணி தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் எச் வினோத் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கிறது. அதனால் இப்படம் எப்போது தொடங்கும் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.

அந்த வகையில் விஜய்யின் தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த இரு படங்களையும் முடித்தவுடன் அஜித் படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி இருக்கும் என்கின்றனர். ஒரு வேளை அஜித் தாமதித்தால் சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு அஜித் படத்தை இயக்குவார்.

இதற்கு அடுத்து தீரன் அதிகாரம் 2 படம் உருவாக இருக்கிறது. ஏற்கனவே கார்த்தி கூட்டணியில் இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதில் கமலுடன் கூட்டணி என்ன ஆயிற்று என உங்களுக்கு தோன்றலாம். தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் அந்த கூட்டணி இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கை நிறைய படங்களை வைத்திருக்கும் எச் வினோத்

Next Story

- Advertisement -