செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

வாய்ப்புக் கேட்ட பிரபல நடிகை, திமிராக பேசிய சிவகார்த்திகேயன்.. பழசை மறந்து மேடையில் ஆணவ பேச்சு

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ்கள் அதிகம். இவரை நம்பி தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணம் போடவும் காத்து கிடக்கிறார்கள். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமை கொண்டவராக கோலிவுட்டில் ஜொலித்து கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து கவனித்தவர்களுக்கு அவர் கடந்து வந்த பாதையும் தெரியும். ஒரு காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக வந்த இவர், டான்ஸ் ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் இவர் தொகுப்பாளராக மாறினார். தன்னுடைய வித்தியாசமான வர்ணனை ஜாலத்தினால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, சினிமா வாய்ப்பையும் பெற்றார்.

Also Read: கிரிக்கெட் வீரரை வைத்து சிவகார்த்திகேயன் எடுக்கும் புது அவதாரம்.. தனுஷுக்கு போட்டியாக போட்ட பக்கா பிளான்

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் சினிமாவில் படிப்படியாக முன்னேறினார். ஆனால் இவர் இப்போது பழசையெல்லாம் மறந்து ஒரு பொது மேடையில் ரொம்பவும் ஆணவமாக பேசியிருக்கிறார். சமீபத்தில் இவர் ஒரு டேன்ஸ் ஷோவில் சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபா மாஸ்டர், நடிகை சினேகா மற்றும் நடிகை சங்கீதா இருக்கின்றனர்.

அந்த மேடையில் சங்கீதா, சிவகார்த்திகேயனுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதாவது அடுத்து ஆடவிருக்கும் 5 ஜோடிகளில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும் என்று சொன்னார். அதற்கு சிவகார்த்திகேயன் உடனே சம்மதம் தெரிவித்தார். ஒரு காட்சியில் மட்டும் வருவது போல் இல்லாமல் படம் முழுக்க வரும்படி தான் நான் வாய்ப்பு கொடுப்பேன் என்று சொன்னார்.

Also Read: விஜய்யை வைத்து நன்றாக சம்பாதித்த சிவகார்த்திகேயன்.. பாவம் இது தளபதிக்கே தெரியாது!

மேலும் பேசிய அவர், தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களுடன் நடிப்பதை நான் பெருமையாக நினைப்பதை விட ரொம்ப திமிராக நினைக்கிறன். ஏனென்றால் நான் வாய்ப்பு தேடிய காலத்தில் டிவியிலிருந்து வந்ததால் என்ன வேண்டாம் என நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை ரொம்ப திமிராக நினைக்கிறன் என்று சொல்லியிருக்கிறார்.

சிவா, அப்படி நடிகைகள் சங்கீதா, சினேகா முன்பு பேசியிருக்க கூடாது. ஏனென்றால் அவர் தொகுப்பாளராக இருந்த போது இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் நடிகைகள் சங்கீதா, ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. அப்படியிருக்க பழசையெல்லாம் மறந்து சிவா ரொம்பவும் ஆணவமாக பேசியிருக்கிறார்.

Also Read: 70 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. பேராசை பெருநஷ்டம் ஆன கதை!

- Advertisement -

Trending News