புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தவறான பழக்கம் இருந்தும், தன்னடக்கமாக இருந்த சிவாஜி.. படப்பிடிப்பில் பூரித்துப் போன எம்ஜிஆர்

தமிழ் சினிமாவின் இருவேறு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனை இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் வெளியான கூண்டுக்கிளி திரைப்படத்தில் ஒன்றாக நடித்து அசத்தினர். பொதுவாக சிவாஜி கணேசன் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது, மற்ற நடிகர்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கிளம்புவது என இன்று வரை மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாக அவரது ஒழுக்கம் திகழ்ந்து வருகிறது.

அதேபோல எம்.ஜி.ஆர் அவர்களின் ஒழுக்கமும் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இன்று வரை உள்ள முன்னணி நடிகர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து இருக்கும். அப்படியிருக்கும் தருவாயில் கூண்டுக்கிளி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சிவாஜி கணேசன் அவரது நடிப்பை மட்டும் முடித்துவிட்டு சட்டென்று எங்கோ கிளம்பி விடுவாராம்.

Also Read : ஒரே ரூமில் ட்ரீட்மென்ட் பார்த்த எம்ஜிஆர், MR ராதா.. துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விளக்கிய ராதாரவி

பொதுவாக சிவாஜி கணேசன் படப்பிடிப்பின் போது அவ்வளவு சீக்கிரமாக எங்கும் நகர்ந்து செல்ல மாட்டார் ஆனால் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் கூண்டுக்கிளி படப்பிடிப்பின் போது மட்டும் அடிக்கடி கிளம்பி சென்றுள்ளார். இதனை கண்ட எம்.ஜி.ஆர் ஏன் அவர் இப்படி செய்கிறார் என்ற கேள்வி அவருக்குள் இருந்து கொண்டே இருந்ததாம்.

அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் அடிக்கடி படப்பிடிப்பை முடித்துவிட்டு சட்டென்று கிளம்புவதை கண்டு இயக்குனர் ராமண்ணாவிடம் இதுகுறித்து தான் சிவாஜியிடம் கேட்கப் போவதாக தெரிவித்துள்ளாராம். இதை கேட்ட ராமண்ணா சிவாஜியிடம் சென்று எம்.ஜி.ஆர் சொன்னதைக் கேட்டு உள்ளார்.

Also Read : சிவாஜியே பார்த்து பிரம்மித்து போன நடிகை.. 60, 70களின் நயன்தாரா இவர்தான்

அதற்கு பதிலளித்த சிவாஜி கணேசன் தனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பது பலரும் அறிந்ததே. நான் படப்பிடிப்பின் போது புகைப்பிடிப்பேன், ஆனால் எம்.ஜி.ஆர் முன்னாள் புகைப்பிடிப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. அவர் முன்னால் எப்படி அவமரியாதையாக நடந்து கொள்வது என தெரியாமல் தான் இப்படி தனியாக வந்து புகை பிடித்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக சிவாஜி பதில் கூறினாராம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் நடித்த காலக்கட்டத்தில் இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் சமமாகவே இருந்தனர் என்று சொல்லலாம். சிவாஜி நினைத்திருந்தால் எம்.ஜி.ஆர் முன்பாகவே புகை பிடித்து இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் மீது உள்ள பற்றுக்கும், மரியாதைக்கும் தலை வணங்கும் விதமாக சிவாஜி செய்த செயல் இன்று வரை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : பாக்யராஜ் குடும்பத்தால் கண்கலங்கிய எம்ஜிஆர்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை சம்பவம்

- Advertisement -

Trending News