Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் விஜய் பற்றிய சுசித்ராவின் கருத்து.. கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக, வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பிய பெருமைக்குரியவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பிக்பாஸ் வீட்டில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, பாலாவை சுற்றிச்சுற்றி வருவதும் அவருக்காகவே பிக் பாஸ் விளையாட்டை விளையாடுவது போன்ற இமேஜ் உருவாக்கிக் கொண்டிருந்ததால், கடுப்பான ரசிகர்கள் வீட்டுக்கு போமா என்று அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுஜித்ரா சோஷியல் மீடியாவே கதி என்று தன்னுடைய சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் படி நடந்து கொண்டுள்ளார்.

மீண்டும் தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜயின் தோற்றத்தை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஜித்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில் வாத்தி கம்மிங் பாடலில் இடம்பெற்றுள்ள காட்சியை குறிப்பிட்டு ‘விஜய் கொஞ்சம் வெயிட் போட்டாலும் சிங்கம் சிங்கம் தான் லே’ என்று தன்னுடைய கமெண்ட்டை பதிவிட்டுள்ளார்.

suchi-instra-pic

மேலும் இன்னொரு புகைப்படத்துடன் ‘தளபதி கியூட் மேக்ஸ்’ என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டுள்ளார். சுஜித்ராவின் இந்தப்பதிவு தளபதி ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது. ஏனென்றால் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் ஸ்லிம்மாக, ஸ்டைலிஷாக அந்த வாத்தி கதாபாத்திரமாகவே தத்ரூபமாக தன்னை மாற்றி நடித்திருப்பார்.பாடகி சுஜி வெயிட் போட்டுட்டாரு என சொல்லும் கருத்து கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்று இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top