அசோக் செல்வனை வீழ்த்திய ஆர்ஜே பாலாஜி.. சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் 4வது நாள் வசூல்

Singapore Saloon, Blue Star 4th Day Collection : நடிகர் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக வலம் வந்த நிலையில் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவருடைய போர் தொழில் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்போது ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் அசோக்செல்வனுடன் பாக்யராஜின் மகன் சாந்தனுவும் நடித்திருக்கிறார். இந்த சூழலில் ப்ளூ ஸ்டார் படத்துடன் ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இரண்டு அணிகளுமே மாறி மாறி ப்ரமோஷன் செய்திருந்தனர். ஒருபுறம் ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக காமெடி ஜானரில் வெளியாகி இருந்தது.

மேலும் ப்ளூ ஸ்டார் படம் சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்த சூழலில் இரண்டு படங்களின் வசூல் விபரத்தை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் ப்ளூ ஸ்டார் படம் முதல் நாளில் 6 லட்சம் வசூல் செய்திருந்தது. மேலும் இரண்டாவது நாளில் 1.13 கோடி மற்றும் மூன்றாவது நாளில் 1.19 கோடி வசூல் செய்தது.

Also Read : மீண்டும் மீண்டும் அரசியல் சாயம் பூசும் பா ரஞ்சித்.. ப்ளூ ஸ்டார் படத்தால் வெடிக்கும் சர்ச்சை

ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்த போதும் 95 லட்சம் மட்டுமே ப்ளூ ஸ்டார் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக ப்ளூ ஸ்டார் 4 நாட்கள் முடிவில் 3.87 கோடி வசூல் பெற்றிருக்கிறது. ஆனால் சலூன் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் ஒரு கோடி வசூல் செய்திருந்தது.

மேலும் இரண்டாவது நாள் முடிவில் 1.79 கோடி மற்றும் மூன்றாவது நாள் முடிவில் 1.49 கோடி வசூலை ஈட்டியது. நேற்றைய தினம் 1.27 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. மொத்தமாக நான்கே நாட்களில் கிட்டத்தட்ட 5.55 வசூலை சிங்கப்பூர் சலூன் படம் பெற்று இருக்கிறது. இதனால் அசோக் செல்வனை சிங்கப்பூர் சலூன் படம் மூலம் ஆர்.ஜே பாலாஜி வீழ்த்தி இருக்கிறார்.

Also Read : சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் இரண்டாவது நாள் வசூல்.. யாருக்கு அடித்தது ஜாக்பாட்

- Advertisement -spot_img

Trending News