கமலுக்காக உருமாறும் சிம்பு.. 100 கோடியில் செய்யப் போகும் சம்பவம்

Actor Simbu: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தன் நடிப்பின் மூலம் சிறந்த முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் சிம்பு. சமீபத்தில் இவர் ஏற்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு இவர் போடும் எஃபெக்ட் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சில காரணங்களால் சினிமா வாய்ப்பே கிடைக்காமல் இருந்த இவர் தற்பொழுது ஏற்கும் படங்களில் மாஸ் காட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பும் குவிந்த வண்ணம் இருக்கிறது. அவ்வாறு தன் உடல் எடையை குறைத்து இவர் ஏற்ற படமான வெந்து தணிந்த காடு, மாநாடு நல்ல விமர்சனங்களை கொடுத்தது.

Also Read: செம குஷியுடன் விஜய் அசால்ட்டா நடித்த 5 படங்கள்.. கடைசி வரை சச்சினுடன் போட்டி போட்ட அய்யாசாமி

அதைத்தொடர்ந்து இவரை வைத்து படம் எடுக்க முயலும் தயாரிப்பாளர்களில் கமலும் ஒருவர். அவ்வாறு இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் தான் சிம்பு 48. இப்படத்தில் சிம்பு இரட்டை வேடம் ஏற்கிறார். மேலும் இப்படம் பீரியட் பிலிம் ஆக எடுக்கப்படுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒரு சிம்பு ஒல்லியாகவும் இன்னொரு சிம்பு குண்டாகவும் காணப்பட வேண்டுமாம். அவ்வாறாயின் உடம்பை மீண்டும் ஏற்ற வேண்டிய நிலைமையில் சிம்பு இருந்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்பொழுது இருக்கும் இந்த உடல் அமைப்பில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Also Read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

மேலும் இக்கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் குண்டான சிம்பு கதாபாத்திரம் படமாக்க உள்ளதாம். அவ்வாறு இரட்டை வேடத்தில் சிம்பு அசத்திய படம் தான் மன்மதன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 19 வருடம் கழித்து மேற்கொள்ள போகும் படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் கமல் தயாரிப்பில் இப்படம் 100 கோடியில் படமாக்கப்படுவதால் இதற்கான டெடிகேஷனை போட்டு வருகிறார் சிம்பு. அதுவும் நிறைய கால அவகாசம் எடுத்து படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு வருகிறார்கள். மேலும் இரட்டை வேடத்தில் தனக்கு அவரே வில்லனாகவும் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Also Read: குருநாதா நீங்க இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை போட்ட பதிவால் ஆடிப் போன மாவீரன் தயாரிப்பாளர்

Next Story

- Advertisement -