தனுஷை பதுங்கி அடிக்க போகும் சிம்பு.. கேப்டன் மில்லரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு படம்

Dhanush – Simbu: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்படும் நடிகர் தனுஷ், சிம்புவுக்கு பின்னால்தான் ஹீரோவாக அறிமுகமானார். உண்மையை சொல்ல போனால் தனுஷுக்கு முதல் படத்தில் நடிக்க கூட தெரியாது. ஆனால் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வாங்கியவர். இவர்கள் இருவரும் ஒரே கட்டத்தில் வளர்ந்து வரும் நாயகன்களாக இருக்கும் பொழுது சமகாலத்து போட்டியாளர்களாக பார்க்கப்பட்டார்கள்.

உண்மையான உழைப்பு ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணமாக இருப்பது நடிகர் தனுஷ். அதே நேரத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையுடன் சுற்றினால் எப்படி ஒரு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதற்கு உதாரணமாக ஆகிவிட்டார் சிம்பு. ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த காரணங்களால், தனுசுடன் போட்டி போட முடியாமல் அப்படியே பின்வாங்கி விட்டார்.

Also Read:பொங்கல் ட்ரீட் ஆக ரிலீசாக இருக்கும் 6 படங்கள்.. தனுஷ் உடன் மோதும் Ex-மனைவி

உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடிக்கும் போது எல்லாம், தனுஷ் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போகிவிட்டார். இருந்தாலும் பழைய பகையை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காக, அழிக்க வந்த அசுரன் இல்ல, காக்க வந்த ஈசன் நான் என டயலாக் பேசி தன்னுடைய ரசிகர்களையும், சிம்புவின் ரசிகர்களையும் சேர்த்து உசுப்பேத்தி விட்டார்.

தனுசுக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு

தனுசுக்கு இன்னும் ஐந்து வருடத்திற்கு கால்ஷீட் ஃபுல்லாக இருக்கிறது. ஆனால் சிம்பு பத்து தலை படத்திற்கு பிறகு சைலன்ட் ஆகிவிட்டார். தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. உண்மையில் சிம்பு அமைதியாக இருப்பதற்கு காரணம், கேப்டன் மில்லர் படம் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் அவருடைய 48வது படமும் வரலாற்றுப் படம் என்று சொல்லப்படுகிறது. இதற்காகத்தான் சிம்பு நீளமாக முடி எல்லாம் வளர்த்து வருகிறார். இந்த படத்தை எந்த அளவுக்கு மெனக்கெட்டு சிறப்பாக மாற்ற முடியுமோ, அந்த அளவுக்கு மாற்றங்கள் என இயக்குனரிடம் சொல்லி இருக்கிறாராம்.

இதனால்தான் எஸ் டி ஆர் 48 படம் இன்று வரை தொடங்கப்படாமல் இருக்கிறது. ஏதாவது ஒரு விதத்தில் தனுஷை ஜெயித்து விட வேண்டும் என்பதுதான் சிம்புவின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இப்போதைக்கு கேப்டன் மில்லர் படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என பதுங்கி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.

Also Read:வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்.. மூணு தலைமுறைனா சும்மாவா!