புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

முத்துவின் பேச்சால் சூனியக்காரி ஆக மாறப்போகும் ஸ்ருதி.. இந்த விஷயத்துல எஸ்கேப் ஆன மீனா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் அப்பாவிற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்படுகிறது.  இதை பார்த்ததும் மீனா ரொம்பவே பயந்து போகிறார். ஏனென்றால் அந்த வீட்டில் மீனாவும், மாமனார் மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு யாரும் உதவி செய்வதற்கு இல்லை. உடனே மீனா முத்துவிற்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார்.

ஆனால் அவர் எடுக்கவில்லை என்பதால் மீனா ஒரு ஆட்டோவை வரச் சொல்லி தன்னுடைய மாமனாரை மருத்துவமனைக்கு அழைத்து போகிறார். போகும் பொழுது முத்துவிற்கு தகவலை கொடுத்துட்டு போகிறார். அதன் பின் மீனா ஆஸ்பத்திரியில் மாமனாரை சரியான நேரத்தில் சேர்த்து விடுகிறார். அடுத்து முத்து மருத்துவமனைக்கு வந்து பார்க்கிறார்.

அப்பொழுது மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால் வீட்டில் கொசு மருந்துவை ஓவராக அடித்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்திருக்கிறது. நல்ல வேலை சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்ததால் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் வீட்டிற்கு அழைத்து விட்டு போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

Also read: முத்து மீனாவை வீட்டை விட்டு அனுப்ப பிளான் பண்ணும் ரோகினி.. மருமகளுக்கு ஏத்த மாமியாராக இருக்கும் விஜயா

உடனே மீனா மற்றும் முத்துவும் அண்ணாமலையை கூட்டிட்டு வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். பிறகு ஸ்ருதி வந்து எதுவுமே நடக்காத மாதிரி, சரியாயிடுச்சா என்று கேட்கிறார். அதற்கு முத்து ஏன் சரியாக கூடாதுன்னு நினைச்சியா என்று கேட்கிறார். அப்பொழுது ஸ்ருதி சரியாயிடுச்சு என்றால் சின்ன பிரச்சினை தான் என்று ரொம்ப சாதாரணமாக கேட்கிறார்.

அதற்கு முத்து என்ன நீ பெரிய பிரச்சினை ஆகணும் என்று எதிர்பார்த்தியா என ஸ்ருதி மீது கோபத்துடன் கேட்கிறார். இது எதுவுமே புரியாத மாதிரி ஸ்ருதி என்ன சொல்ற என கேட்கிறாள். அப்பொழுது தான் முத்து நீ அடிச்சா கொசு மருந்து தான் எங்க அப்பாவிற்கு ஒத்துக் கொள்ளாமல் இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆகியிருக்கிறது. இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா என்று ஸ்ருதியுடன் சண்டை போட போகிறார்.

ஸ்ருதி தெரிஞ்சு பண்ணுதோ தெரியாம பண்ணாங்களோ, அது பிரச்சனை இல்லை, தற்போது எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியை இல்லாமல் பேசுவது தான் பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஸ்ருதிக்கு முத்துவை பிடிக்காது, இப்பொழுது அடிக்கடி இவரிடமே மோதிக் கொள்வதால் முத்துவையும் மீனாவையும் பிரிப்பதற்கு சூனியக்காரி மாதிரி வேலை பார்க்கப் போகிறார். இதற்கிடையில் இந்த பழி மீனா மீது விழாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also read: மாரிமுத்து இல்லாததால் தடுமாறிப்போன எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கிய குணசேகரன்

- Advertisement -spot_img

Trending News