மாரிமுத்து இல்லாததால் தடுமாறிப்போன எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கிய குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு மொத்த கதையும் தடுமாறி போய்விட்டது. ஏதாவது ஒரு விதத்தில் சுவாரஸ்யம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் கதை அனைத்துமே நெகட்டிவ் ஆகவும், வெறுப்பாகவும் தான் அமைந்து வருகிறது.

முக்கியமாக தற்போது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேலராமமூர்த்தி இருந்த மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கி விட்டார். இந்த சீரியலுக்கு மற்ற சீரியல்களை பரவாயில்லை என்பதற்கேற்ப கதையின் ட்ராக் மாத்திக்கொண்டு வேறு திசையில் வருகிறது. பெண்கள் வெறும் வாய்சவடால் விடுவதற்கு மட்டும்தான் லாய்க்கு என்று குணசேகரன் அடிக்கடி சொல்வதற்கு ஏற்ப இயக்குனரும் அதை உறுதிப்படுத்திய வருகிறார்.

வாயால் மட்டும்தான் அவர்கள் பேசுகிறார்கள் தவிர செயலில் எதுவுமே இல்லை. முக்கியமாக நந்தினி, ரேணுகா பேச வேண்டிய இடத்தில் பேசாமல் தலையாட்டி பொம்மையாக இருந்து வருவது எரிச்சல் படுத்துகிறது. அதிலும் தர்ஷினி காணாமல் போய் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகியும் தற்போது வரை எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்காமல் கதை திசை திரும்பி விட்டது.

Also read: எல்லா பிரச்சனையும் கதிர் தலையில் போட்டுட்டு எஸ்கேப் ஆகும் கோமதி.. பாக்யா நடத்தப் போகும் நாடகம்

இதுல ரேணுகா, நந்தினி, ஜனனி மற்றும் ஈஸ்வரி இவர்கள் அனைவரும் தர்ஷினி இருக்கும் இடத்திற்கு போயும் கடைசியில் ஒன்னும் இல்லாமல் தான் திரும்பி வந்து இருக்கிறார்கள். போதாக்குறைக்கு குணசேகரன் வக்ர புத்தியை காட்டிவிட்டு ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி தான் எல்லாத்துக்கும் காரணம் விசாரணை பண்ணுங்கள் என்று கேவலமாக பேசி வருகிறார்.

அதற்கேற்ற மாதிரி கோட்டில் விசாரித்த பொழுது இவர்கள் மேல்தான் தவறு இருப்பது போல் விசாரணைக்கு உத்தரவு விட்டார்கள். இதற்கு இடையில் தர்ஷினி என்ன ஆனார். மறுபடியும் அந்த கும்பலிடம் சிக்கிவிட்டாரா என்பது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இதனை தொடர்ந்து குணசேகரன் செய்த மட்டமான வேலையை புரிந்து கொண்டு வீட்டில் இருக்கும் சக்தி மற்றும் கதிர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள்.

Also read: குசும்புக்கார முத்து கொஞ்சம் ஓவராகத்தான் போறாரு.. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரோகிணியை பந்தாடும் விஜயா