ஜெயிலர் பார்த்தாச்சு, 4 வருடம் கழித்து இமயமலை கிளம்பிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

Jailer Rajini: இப்போது கோலிவுட் சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் படம் தான் ரஜினியின் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார், மலையாள சூப்பர் ஸ்டார் என பெரும் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் நாளை திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில் ரஜினி எப்போதுமே இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் கோவிட் தொற்று காரணமாக கடந்த நான்கு வருடமாக இமயமலைக்கு செல்லவில்லை. ஆனால் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலத்தீவுக்கு சென்று வந்திருந்தார். மேலும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் ரஜினி செம மாஸாக பேசினார்.

Also Read : இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

இந்நிலையில் ஜெயிலர் படத்தை முழுவதுமாக சூப்பர் ஸ்டார் பார்த்து விட்டாராம். இதனால் உடனடியாக 4 வருடங்களுக்குப் பிறகு இமயமலைக்கு ரஜினி புறப்பட்டிருக்கிறார். அப்போது செய்தியாளர்கள் ரஜினியை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். முதலாவதாக ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி தான் வைக்கப்பட்டது.

ரஜினியை பொறுத்தவரையில் தான் நடிக்கும் போதே இந்த படம் வெற்றி பெறுமா என்பதை கணித்து விடுவாராம். இதை பல மேடைகளில் அவரே சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஜெயிலர் படம் பற்றி கேட்கும் போது, நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்.

Also Read : நெல்சனால் இமயமலைக்கு சென்ற ரஜினி.. ஜெயிலரை பார்த்த பின் ஏற்பட்ட குழப்பம்

மேலும் ஜெயிலர் படத்தை பற்றி நான் சொன்னால் நன்றாக இருக்காது என்று ரஜினி கூறியிருக்கிறார். இவர் இவ்வாறு சொன்னது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை நெல்சன் ரஜினியை ஜெயிலர் படத்தின் மூலம் திருப்திபடுத்த வில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் நாளை படம் வெளியாக உள்ள நிலையில் திடீரென ரஜினி இமயமலைக்கு கிளம்பியது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்சனுக்கு இந்த படம் வெற்றி அடைந்தால் தான் அடுத்த படம் கிடைக்கும் என்று உள்ள நிலையில், ரஜினியும் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

Also Read : ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

- Advertisement -