ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

Actor Rajini: ஆரம்பத்தில் மேடைகளில் பேசவே தயங்கின ரஜினி, தற்போது கிடைக்கும் மேடைகளில் எல்லாம் இவருடைய அனுபவத்தை ஒரு கதையாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மைண்ட் வாய்ஸ் நினைச்சு அனைவரது முன்னிலையும் நின்னு தைரியமாக இவர் செய்த லீலைகள் அனைத்தையும் ஒத்துக் கொண்டு இவரைப் பற்றி இவரே பேசி வருகிறார்.

அதாவது சமீபத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். அப்பொழுது இவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அது எந்த மாதிரியான என்றால் இனி யாரும் தயவு செய்து குடிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: 31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

பொதுவாக சொல்வார்களே பட்டால் தான் திருந்துவார்கள் என்று. அதை இவருடைய பேச்சிலேயே நன்றாக தெரிகிறது. அதற்கு காரணம் இவர் இளம் வயதில் இருக்கும் பொழுது செய்த விஷயங்கள் தான். கொஞ்சம் பேரும் புகழும் வந்து விட்டால் கூடவே சில கெட்ட பழக்கங்களும் ஒட்டிக் கொள்ளும். அதுபோலவே பணம் சம்பாதித்த பிறகு ரஜினி தொடர்ந்து அடிமையான விஷயங்கள் என்றால் மது அருந்துவதும், சிகரெட் குடிப்பதும் தான்.

அப்படி இவர் ஒரு நாளைக்கு மட்டுமே குறைந்தது 5 பாக்கெட் சிகரட்டை ஊதி தள்ளுவாராம். இதனை தொடர்ந்து தினமும் சரக்கு அடிப்பதும் தான். இது இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது கையில் இந்த இரண்டு விஷயங்களையும் வைத்துக் கொண்டுதான் சுற்றித்திரிந்து இருக்கிறார். அதனால் யார் என்ன சொன்னாலும் இவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார்.

Also read: அந்த படம் வேண்டாம், மீண்டும் எடுத்தால் ஓடாது.. சூப்பர் ஹிட் படத்தை ரஜினி மறுத்ததன் காரணம்

இந்நிலையில் இவர் எந்த பிராண்டை பயன்படுத்தி இருக்கிறார் என்ற விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது இவருக்கு மிகவும் பிடித்த சரக்கு “VAT 69” மற்றும் சிகரெட் “555”. இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் ரஜினியை பார்க்கவே முடியாதாம் அந்த அளவிற்கு குடிகாரனாகவும், செயின் ஸ்மோக்கர் ஆகவும் மற்றவர்கள் கண்ணிற்கு தெரிந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு நேர் மாறாக மாறி ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார்.

அதிலிருந்து இவர் இந்த பழக்கத்தை விட்டு விட்டு மற்றவர்களுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார். பார்ப்பவர்கள் அனைவரிடமும் தயவு செய்து சரக்கு மற்றும் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறி வருகிறார். இதனால் என்னென்ன விளைவுகள் வரும் என்பது நான் அனுபவித்ததினால் சொல்கிறேன் தயவு செய்து வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று அறிவுரை கூறி வருகிறார். இதனால் இவரை பாலோ பண்ணும் கோடான கோடி ரசிகர்களும் இவர் சொல்வதை மனதில் வைத்துக் கொண்டு பல பேர் தண்ணி மற்றும் சிகரெட் போன்றவைகளை நிறுத்திவிட்டனர்.

Also read: முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

Next Story

- Advertisement -