நெல்சனால் இமயமலைக்கு சென்ற ரஜினி.. ஜெயிலரை பார்த்த பின் ஏற்பட்ட குழப்பம்

Jailer Movie: நெல்சன் இயக்கத்தில் ரஜினி மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ஜெயிலர். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், அனிருத், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டாரை பார்க்கும்போது செம குஷியாக இருந்தார். நெல்சன் மற்றும் அனிருத் இருவரையும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து இருந்தார். அரை மணி நேரத்திற்கு மேலாக மேடையில் ரஜினி அசரவைக்கும்படி பேசினார். இன்னும் சிறிது நேரம் அவர் பேச மாட்டாரா என்ற எண்ணம் ரசிகர்களுக்கு வர தொடங்கியது.

Also Read : ரஜினிக்கு பிடித்த சரக்கு மற்றும் சிகரெட் பிராண்ட் இதுதான்.. ஒரு நாளைக்கு இத்தனை பாக்கெட் குடிப்பாரா.?

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் பத்தாம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் இதுவரை முழுவதுமாக ஜெயிலர் படத்தை பார்க்காத ரஜினி தற்போது முழு படத்தையும் பார்த்து உள்ளாராம். மேலும் படத்தைப் பார்த்துவிட்டு எந்த விமர்சனமும் சொல்லாமல் அமைதியாக அங்கிருந்து வெளியே சென்று விட்டாராம்.

அதோடு மட்டுமல்லாமல் உடனடியாகவே இமயமலைக்கு புறப்பட்டு விட்டாராம். எல்லோரிடமும் முகம் மலர்ச்சியுடன் பேசும் ரஜினி திடீரென மௌனத்துடன் சென்றதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் இமயமலை சென்றிருக்கிறார்.

Also Read : 31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

எனவே ஒரு வேலை ரஜினிக்கு பிடித்த மாதிரி இந்த படம் அமையவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வரும் ரஜினி ஜெயிலர் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்த படமும் தன்னை கைவிட்டு விட்டால் சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் செய்வது அறியாமல் இருந்த ரஜினி திடீரென இமயமலைக்கு புறப்பட்டு விட்டார். ஜெயிலர் படம் மூலம் நெல்சன் தன்னைக் காப்பாற்றுவாரா அல்லது மாட்டாரா என்பது இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளியாக உள்ளதால் பதில் கிடைத்து விடும். ஆனால் அதுவரை உச்சகட்ட பயத்தில் தான் ரஜினி இருந்து வருகிறார்.

Also Read : முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்