ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

சரவெடியாய் வெடித்த சிவாஜி.. தீபாவளிக்கு வெளியான 41 படங்கள்

1952 ஆம் ஆண்டிலிருந்து 1993வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கிட்டத்தட்ட 41 திரைப்படங்கள் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் 8 முறை இரண்டு திரைப்படங்களாக சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்துள்ளன.இதில் 22 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்தும், 5 திரைப்படங்கள் 175 நாட்களை கடந்தும், 3 திரைப்படங்கள் 200 நாட்களைக் கடந்து ஓடி உள்ளன.

சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படம் 1952 தீபாவளியன்று ரிலீசாகி 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றிருந்தது.தொடர்ந்து,1995 ஆம் ஆண்டு சிவாஜிகணேசனின் 25-வது திரைப்படமான கள்வனின் காதலி திரைப்படமும் ,கோடீஸ்வரன் என்ற மற்றொரு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது.

Also Read  :பல வருடங்களாக சாதனையை தக்க வைத்த எம்ஜிஆர் சிவாஜி.. அசால்டாக முறியடித்த 2 ஹீரோக்கள்

1959 ஆம் ஆண்டு அவள் யார்,பாகம் பிரியன் திரைப்படங்கள் ஒன்றாக ரிலீசானது. இத்திரைப்படம் பல திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 1960 இல் பாவை விளக்கு, பெற்ற மனம் திரைப்படங்கள் ஒன்றாக தீபாவளியன்று ரிலீசானது.1961இல் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளியாகி பெரும் வசூலைப் பெற்றது.

1962-ல் வெளியான பந்த பாசம் திரைப்படம் 100 நாட்களை கடந்த திரைப்படமாகும். அதன் பின்பு 1963ல் வெளியான அன்னை இல்லம் திரைப்படமும் 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது. 1964ஆம் ஆண்டு முரடன் முத்து, நவராத்திரி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது.

Also Read  :முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள்.. எம்.ஜி.ஆர், சிவாஜியை போற்றும் திரை உலகம்.!

இதில் நவராத்திரி திரைப்படம் 100 நாட்களை தாண்டி திரையரங்கில் ஓடி சாதனை படைத்த திரைப்படமாகும். அதேபோல 1967 ஆம் ஆண்டு வெளியான இரு மலர்கள் மற்றும் ஊட்டி வரை உறவு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் 100 நாட்களை கடந்து சூப்பர் தீபாவளியாக அமைந்தது.

1969 ஆம் ஆண்டு ஐரோப்பா நாடுகளில் முதன்முதலாக படப்பிடிப்பு எடுக்கப்பட்ட சிவந்தமண் திரைப்படம் வெளியாகி நூறு நாட்களை கடந்தது. அதன் பின்னர் 1970 எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் என்ற இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீசாகி 100 நாட்களை கடந்த திரைப்படங்களாகும். 1973 கௌரவம் திரைப்படம்,1983ஆம் ஆண்டு வெள்ளை ரோஜா திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படங்களாகும்.

Also Read  :தவறான பழக்கம் இருந்தும், தன்னடக்கமாக இருந்த சிவாஜி.. படப்பிடிப்பில் பூரித்துப் போன எம்ஜிஆர்

- Advertisement -spot_img

Trending News