வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் கணவர்.. விவாகரத்து கேட்டு மன்றாடும் ஷாமின் ரீல் மனைவி

Actor Shaam: சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் அதிகம் பிரபலங்களின் விவாகரத்து செய்தி வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் தான் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். ஆனால் தனது கணவர் விவாகரத்து கொடுக்கவில்லை என்று பிரபலம் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாம் இப்போது தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களை நடித்து வருகிறார். ஒரு காலத்தில் ஹீரோ அந்தஸ்து இருந்தாலும் தனது மார்க்கெட் குறைந்த உடன் இப்போது ஹீரோக்களுக்கு அண்ணன் தம்பியாக வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வருவது பாராட்டுக்குரிய விஷயம். அப்படி விஜய்யின் வாரிசு படத்திலும் ஷாம் நடித்திருந்தார்.

Also Read : தலையில் மிளகாய் அரைக்க பார்த்த லியோ டீம்.. ரிவிட் அடித்த லலித், உறைந்து போய் நிற்கும் விஜய்

அதில் அவருடைய மனைவியாக நடித்திருந்தவர் பிக் பாஸ் சம்யுக்தா. இவர் இப்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சம்யுக்தா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தனது வாழ்வில் நடந்த துயரங்களை சொல்லி வேதனைப்பட்டிருந்தார். அதாவது கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த தம்பதியினருக்கு குழந்தையும் உள்ள நிலையில் கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் கோவிட் தொற்று காலத்தில் தான் கார்த்திக் நான்கு வருடங்களாக வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்த விஷயம் சம்யுக்தாவுக்கு தெரிந்துள்ளது. மேலும் அப்போது கோவிட் தொற்று அதிகமாக இருந்ததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read : பிக் பாஸ் வீட்டை நாலாக பிளக்க போகும் 20 போட்டியாளர்கள் இவர்கள்தான்.. மூர்த்தியின் தம்பியை தூக்கிய விஜய் டிவி

இதனால் சம்யுக்தா துபாய்க்கும் செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். அதன் பிறகு தான் விஜய் டிவி விஜே பாவனாவின் நட்பு இவருக்கு கிடைக்க அதன் மூலம் பிக் பாஸில் நுழைந்து மிகவும் பிரபலமடைந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தால் வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மேலும் இரண்டாவது திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்க என்னால் முடியாது. அதோடு மட்டுமில்லாமல் முதல் திருமணம் செய்து கொண்டதற்கே விவாகரத்து வாங்கவில்லை. எவ்வளவோ நாங்கள் கேட்டு பார்த்தோம் கார்த்திக் இங்கு வர சம்மதிக்கவில்லை. தற்போது வரை விவாகரத்து தனக்கு கிடைக்கவில்லை என வேதனையுடன் சம்யுக்தா பேசியிருந்தார்.

Also Read : அடுத்த அமிர், பாவனி ஜோடி ரெடி ஆச்சு.. ரவீனாவுக்கு ஆள் சேர்த்து விடும் பிக் பாஸ்