வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அடுத்த அமிர், பாவனி ஜோடி ரெடி ஆச்சு.. ரவீனாவுக்கு ஆள் சேர்த்து விடும் பிக் பாஸ்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1 தொடங்க இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் இந்த முறை யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான ரவீனா கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ரவீனா தாஹா.

ராட்சசன், விஜய்யின் ஜில்லா, புலி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற தொடரின் இரண்டாம் பாகத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திற்கான காரணம் இன்ஸ்டாவில் போடும் வீடியோக்கள் தான்.

Also Read : ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ்க்கு போகும் சீரியல் நடிகர்.. சாக்லேட் பாயை தூக்கிய விஜய் டிவி

இவருடைய போட்டோ சூட் மற்றும் நடன வீடியோக்கள் இணையத்தில் அதிகம் ட்ரெண்டாக தொடங்கியது. இதை அடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ரவீனாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா கலந்து கொள்ள இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு காதல் ட்ராக் இடம்பெறும். ஏனென்றால் இதன் மூலம் கண்டிப்பாக டிஆர்பி எகிறும். முதல் சீசனில் ஓவியா, ஆரவ் தொடங்கி அடுத்ததாக கவின், லாஸ்லியா கடைசி சீசனில் அமீர், பாவனி என ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி இடம் பெற்று வந்தது.

Also Read : மீனாவின் வெறுப்பை சம்பாதித்த கதிர்.. நிலைகுலைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

அந்த வகையில் இந்த முறை ரவீனாவுக்கு ஜோடியாக டான்சர் மணி சந்திரா பிக் பாஸில் நுழைய இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். அதேபோல் பல தொலைக்காட்சிகளில் நிறைய நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார் மணிச்சந்திரா.

இந்நிலையில் ஏற்கனவே ரவீனா மற்றும் மணிச்சந்திரா இருவரும் நெருங்கிய நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் மணி சந்திரா பிறந்தநாள் அன்று ரவீனா தனது சமூக வலைத்தளத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்ட இப்போது பிக் பாஸில் ஒன்றாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Also Read : டிஆர்பி இல்லாததால் அதிரடியாக ஊத்தி மூடப்படும் விஜய் டிவி சீரியல்.. 1300 எபிசோடை கடந்த சீரியலாச்சே!

- Advertisement -

Trending News