குக் வித் கோமாளி சீசன் 4ல் இரண்டாவது எலிமினேஷன் யார் தெரியுமா.? யாரும் எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இதன் சிறப்பம்சமாக இருப்பதே, சீரியசான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு குறையாமல் புதுவிதமான கொடுப்பதுதான். இதனால் 3 சீசன்களும் வெற்றிகரமாக நிறைவடைந்து 4-வது சீசன் சமீபத்தில் துவங்கப்பட்டது. இதில் இந்த வாரம் நடைபெறும் இரண்டாவது எலிமினேஷனில் யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகி, நிகழ்ச்சியில் அதிரடி ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது

Also Read: குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ

இதில் புகழ், பாலா, மணிமேகலை, தங்கத்துரை, சுனிதா, ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், சிவா, ரவீனா, மோனிஷா, குரேஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக அலப்பறை செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் 10 போட்டியாளர்களில் கடந்த வாரம் கிஷோர் எலிமினேட் செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக யார் எலிமினேட் ஆகப்போகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதில் VJ விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில், மைம் கோபி இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறுகிறார். படங்களில் சீரியஸாகவே மைம் கோபியை பார்த்த ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக பார்த்தது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது, அவர் வெளியேறுவது சிலருக்கு  வருத்தம் அளிக்கிறது.

Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்

இந்த வாரம் நடிகை ஹன்சிகா மோத்வானி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். திருமணம் ஆன பிறகு ஹன்சிகா முதல் முதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்திருப்பது ரசிகர்களையும் குதூகலப்படுத்தியுள்ளது. மேலும் மீதம் இருக்கும் போட்டியாளர்களில், சிவாங்கி இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக வரவேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இதற்கு முந்தைய சீசன்களில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி இந்த முறை போட்டியாளராக களம் இறங்கியது இந்த சீசனின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இவர், வகை வகையாக சமையல் செய்து நடுவர்களையும் ஒவ்வொரு வாரமும் அசத்தி, அவர்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறார். ஆகையால் அவர்தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்றும் கணித்திருக்கின்றனர்.

Also Read: 500 எபிசோடு தாண்டி கிளைமாக்ஸ் எட்டிய விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.. திடீர் முடிவால் ஏற்பட்ட ஏமாற்றம்

Next Story

- Advertisement -