சந்திரமுகி 2, இறைவன் இரண்டாம் நாள் வசூல் விவரம்.. ரஜினியின் இமேஜை காலி செய்த லாரன்ஸ்

Chandramukhi 2, Iraivan 2nd Collection: இந்த வாரம் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியான நிலையில் திரையரங்குகளிலும் சில படங்கள் வெளியானது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தது.

இதில் குறிப்பாக சந்திரமுகி 2 படத்தை தான் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரமுகி படம் வெளியாகி தியேட்டரில் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்போது வரை அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருந்த நிலையில் இப்போது ரஜினியின் இமேஜை கெடுக்கும் படியாக சந்திரமுகி 2 உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Also Read : இறைவனை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த சந்திரமுகி 2.. வேட்டையனின் வசூல் வேட்டை ஆரம்பம்

அதாவது வேட்டையனாக ரஜினி மாஸ் சம்பவம் செய்திருப்பார். ஆனால் லாரன்ஸ் இடமும் அதை எதிர்பார்த்த நிலையில் சொதப்பிவிட்டார் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 7.5 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் மிகப்பெரிய சருக்களை சந்தித்திருக்கிறது.

அதாவது சந்திரமுகி 2 படம் இரண்டாவது நாள் முடிவில் 4.5 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மேலும் படத்திற்கு தொடர்ந்து மோசமான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் வாரங்களில் வசூல் மிகக் குறையும் என கூறப்படுகிறது. அடுத்ததாக ஜெயம் ரவியின் இறைவன் படம் ஏ சர்டிபிகேட் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது.

Also Read : இந்த வாரத்துல சந்திரமுகி 2, இறைவனை தும்சம் செய்த படம்.. கமலின் மகாநதி படத்தைக் கொண்டு உருவாக்கிய இயக்குனர்

இதுவரை வெளியான சீரியல் கில்லர் படம் போல இறைவன் படமும் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 2.50 கோடி மட்டுமே இறைவன் படம் வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாளில் இன்னும் சற்று குறைந்து 1.75 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆக மொத்தம் இதுவரை 4.25 கோடி மட்டுமே இறைவன் படம் வசூல் செய்திருக்கிறது.

ஜெயம் ரவி இந்த படத்தை பெரிதும் நம்பிய நிலையில் இப்போது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல் சந்திரமுகி 2 படத்தை நம்பி லைக்காவும் பல கோடி முதலீடு செய்திருந்தது. இப்போது போட்ட பட்ஜெட்டை எடுக்குமா என்ற நிலையில் தான் சந்திரமுகி 2 படமும் இருக்கிறது. ஆகையால் லாரன்ஸ் மற்றும் ஜெயம் ரவி இருவருக்குமே இந்த படங்கள் காலை வாரி விட்டுள்ளது.

Also Read : துக்கம் தொண்டையை அடைக்க வைத்த சந்திரமுகி 2.. வேட்டையன் ரஜினி சேர்த்து வச்ச பெயரை கெடுத்துட்டாங்க!

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்