முதலில் செய்த தப்பை களை எடுக்கும் அண்ணாச்சி.. அடுத்ததாக கொடுக்கப் போகும் மரண அடி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் உருவான தி லெஜெண்ட் திரைப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. பலரின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளான அந்த திரைப்படத்தை அடுத்து அண்ணாச்சி விரைவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாதங்கள் தான் கடந்ததே தவிர அவரிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

போதாத குறைக்கு அந்த திரைப்படமே சமீபத்தில் தான் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த அளவுக்கு அண்ணாச்சி ஏதோ ஒரு திட்டத்துடன் பொறுப்பை காத்து வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்த மரண அடிக்கு தயாராகி விட்டாராம். அதை நிரூபிக்கும் பொருட்டு அண்ணாச்சி மாஸ் அண்ட் கிளாஸ் ஆக இருக்கும் படியாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பரவ விட்டிருந்தார்.

Also read: அண்ணாச்சி தில்லா குறைத்த 30 வயது.. உல்டா பண்ணிய மாஸ் ஹீரோவின் கெட்டப்பை கண்டுபிடிச்சாச்சு

அவரிடம் இருந்து இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் அடுத்த படத்திற்கான கெட்டப்பா இது என ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படி பரபரப்பை கிளப்பிய அண்ணாச்சி அடுத்ததாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளாராம். ஏனென்றால் அவர் தன் முதல் படத்தை சீனியர் இயக்குனர்களை நம்பி கொடுத்து மோசம் போனார்.

அந்த தவறை அடுத்த படத்தில் செய்யக்கூடாது என்பதற்காகவும் எதில் எல்லாம் அவர் சொதப்பினாரோ அதையெல்லாம் இப்போது களை எடுக்க போகிறாராம். அந்த வகையில் அண்ணாச்சி இப்போது மூன்று இளம் இயக்குனர்களிடம் கதைகளை கேட்டிருக்கிறார். அந்த கதைகள் அவருக்கு பிடித்திருந்தாலும் அதில் பெஸ்டாக இருக்கும் கதையை செலக்ட் செய்ய யோசித்து வருகிறாராம்.

Also read: இப்ப புரியுதா அண்ணாச்சியோட பவர்.. விஜய், அஜித்தை தாண்டி முதல் இடத்தை பிடித்தாரா தி லெஜன்ட்.?

ஏனென்றால் அவரின் முந்தைய படம் அனைவருக்கும் ஒரு மெசேஜ் சொல்லும் படியாக அமைந்துவிட்டது. அதிலும் சீனியர் இயக்குனர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என திட்டமிட்டு படத்தை எடுத்திருந்தார்கள். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் அனைவரும் என்ஜாய் செய்யும் வகையில் கதை இருக்க வேண்டும் என அண்ணாச்சி எதிர்பார்க்கிறாராம்.

அதில் அவர் இளமை துள்ளலுடன் காதல் மற்றும் ஆக்சன் கலந்த பாணியில் கதையை தேர்ந்தெடுக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அதனால் தான் தற்போது அவர் தன் தோற்றத்தையும் முற்றிலும் மாற்றி இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். அந்த வகையில் அண்ணாச்சி முந்தைய படம் போல் இல்லாமல் இந்த முறை பக்கா பிளானோடு களமிறங்க இருக்கிறார்.

Also read: அடுத்த மரண அடிக்கு ரெடியான லெஜெண்ட் அண்ணாச்சி.. மீசை, தாடி என மாறிப்போன வைரல் புகைப்படம்