16 வயதில் திருமணம், ரெண்டு கல்யாண வாழ்க்கையும் சோலி முடிந்த பரிதாபம்.. சரண்யாவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை

Saranya Ponvannan: பொதுவாக கதாநாயகிகள் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வார்கள். ஆனால் இங்கு ஒரு நடிகை 16 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். அதுவும் அறியாத வயதில் நடந்த அந்த திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. அவருடன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்த வேறு ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் சில வருடங்கள் போக மனக்கசப்பு காரணமாக பிரிந்துவிட்டார். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த அந்த நடிகை நடுவில் படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்தார். இப்போது மீண்டும் ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Also Read : சரண்யா பொன்வண்ணனுக்கு 2ம் திருமணம் செய்து வைத்த இயக்குனர்.. முதல் கணவர் யார் தெரியுமா?

பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை சரிதா. அவள் அப்படி தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சரிதா அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதுவும் குறிப்பாக ரஜினியுடன் நிறைய படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இந்நிலையில் தனது 15 வயதிலேயே வெங்கட் சுப்பையா என்பவரை 1975 ஆம் ஆண்டு நடிகை சரிதா திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த வருடமே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : கருப்பு அழகியாய் சினிமாவில் சாதித்து காட்டிய 5 நடிகைகள்.. ரஜினியை, மருமகளாய் புரட்டி எடுத்த சரிதா

இவர்கள் இருவரும் 2011 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகு தற்போது வரை சரிதா தனிமையில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் அவரது அம்மாவாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்.

மாவீரன் படம் சரிதாவுக்கு சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு சரிதாவுக்கு வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சரண்யா பொன்வண்ணன் தான் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த வந்தார். இப்போது அவருக்கு போட்டியாக சரிதா வந்து விட்டார்.

Also Read : ரஜினிக்கு தங்கச்சியாகவும், காதலியாகவும் நடித்த 5 நடிகைகள்.. நெற்றிக்கண் சக்ரவர்த்தியை தெறிக்கவிட்ட சரிதா

Next Story

- Advertisement -