ரஜினிக்கு தங்கச்சியாகவும், காதலியாகவும் நடித்த 5 நடிகைகள்.. நெற்றிக்கண் சக்ரவர்த்தியை தெறிக்கவிட்ட சரிதா

தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகைகளின் மார்க்கெட்டை பொறுத்து அந்தந்த காலத்தில் அவர்களுக்கு கேரக்டர்கள் அமையும். ஒரு ஹீரோவுக்கு, ஹீரோயின் ஆக நடித்துவிட்டு அதிலிருந்து சில காலங்களிலேயே அதே ஹீரோவுக்கு அம்மாவாகவும் நடித்த ஹீரோயின்கள் உண்டு. அதேபோல தான் நடிகை மீனா ரஜினிகாந்த்திற்கு மகளாகவும் நடித்து பின்னர் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். அதே வரிசையில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்து, பின்னர் ஹீரோயினாக நடித்த நடிகைகளும் உண்டு.

ஸ்ரீதேவி: ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட ஜோடிகளாக இருந்தவர்கள். தன்னுடைய 13 வயதில் ரஜினி மற்றும் கமலஹாசன் நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் ஸ்ரீதேவி தன்னுடைய திரை பயணத்தை ஒரு ஹீரோயினாக தொடங்கினார். கிட்டத்தட்ட 17 படங்களில் இவர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அதில் கவிக்குயில் என்னும் ஒரு படத்தில் மட்டும் இவர்கள் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள்.

Also Read:எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இந்த இயக்குனரின் மகனா! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

லதா: எம்ஜிஆர் மற்றும் சிவாஜி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த லதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூட செய்திகள் வந்தது. இந்த மூன்று படங்களில் சங்கர் சலீம் சைமன், மற்றும் நீயா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த லதா, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் தங்கையாக நடித்திருப்பார்.

விஜயசாந்தி: நயன்தாராவுக்கு முன்னாடியே தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் ரஜினியின் நெற்றிக்கண் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். அதன் பின் சில வருடங்கள் கழித்து பி வாசு இயக்கத்தில் வெளியான மன்னன் திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவியாகவும் நடித்திருக்கிறார்.

Also Read:ரஜினியுடன் நடிக்க கூடாது.. நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்

சுஹாசினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சுஹாசினி நடித்த தர்மத்தின் தலைவன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இருவரும் காதலர்களாக நடித்தாலும் அந்த அளவுக்கு இவர்களுக்குள் நெருக்கமான காட்சிகள் எதுவும் இருக்காது. இந்த படத்திற்கு முன்பே ரஜினியின் தாய்வீடு திரைப்படத்தில் சுஹாசினி அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறார்.

சரிதா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை சரிதா கணவன் மனைவியாக நடித்த தப்பு தாளங்கள் திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என்று சொல்லலாம். அதே போன்று நெற்றிக்கண் திரைப்படத்தில் சக்கரவர்த்தி என்னும் அப்பா கேரக்டரில் வரும் ரஜினிக்கு ஜோடியாக சரிதா வருவார். இதில் சிவப்பு சூரியன் என்னும் திரைப்படத்தில் மட்டும் ரஜினி மற்றும் சரிதா அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள்.

Also Read:தலைவருக்கு வில்லியாக நடித்ததால் ஊரை காலி செய்த நடிகை.. ரஜினி ரசிகர்கள் அலறவிட்ட சம்பவம்

- Advertisement -spot_img

Trending News