சந்தியாவின் வலையில் சிக்கும் சதிகார கும்பல்.. பக்கா பிளான் போட்ட ஐபிஎஸ் மூளை

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் கதையை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக மாதத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சினையை கொண்டு வந்து, அதை சீரியலின் கதாநாயகி ஐபிஎஸ் ஆக துடிக்கும் சந்தியா தான் சரி செய்கிறார் என்பதை சீரியலில் காட்டுவதே சீரியலின் இயக்குனருக்கு வேலையாய் போச்சு.

அப்படித்தான் போனமாதம் தீவிரவாதி, இந்த வாரம் போலி சாமியார். அதாவது தென்காசியில் சந்தியாவின் மாமியார், அர்ச்சனா உட்பட அனைவரும் ஒரு போலிச் சாமியாரை நம்பி அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மூடநம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் அவர் ஒரு போலி சாமியார் என்ற விஷயம் சந்தியாவிற்கு அவருடைய தோழி சல்மா மூலம் தெரியவருகிறது.

சல்மா, கோவிந்தன் என்ற நிலத் தரகரிடம் ஒரு இடத்தை வாங்கி, அதில் மால் கட்டவேண்டும் என்ற திட்டத்துடன் தென்காசி வரப்போவதாக சந்தியாவிடம் தெரிவிக்கிறார். ஆனால் அதே இடத்தில் இந்தப் போலி சாமியார் கோயில் கட்டுவதற்காக அந்த ஊர் மக்களிடம் பணத்தை வசூலிக்கிறார்.

அந்த போலிச்சாமியார் மற்றும் கோவிந்தன் இருவரும் ஒரே ஆளாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சந்தியா, சர்மாவிடம் அந்த இடத்திற்கான ஆவணத்தை பெற்று, கோயில் கட்டுகிறேன் என மக்களை நம்ப வைத்து மோசடியில் ஈடுபடும் கோவிந்தன் என்கின்ற போலி சாமியாரை கையும் களவுமாக போலீஸிடம் ஒப்படைக்க வேண்டுமென சந்தியா தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி பக்கா ப்ளான் போடுகிறார்.

இதற்கு சந்தியாவின் கணவர் சரவணனும் உறுதுணையாக இருப்பதால் சரவணன் வீட்டிலேயே வந்து அந்த போலி சாமியார் போட்ட நாடகத்தை கண்ணார பார்க்கின்றனர். பிறகு அந்த போலீஸ் சாமியாரும் கோவிந்தனும் ஒருவர்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சல்மாவை கோவிந்தனுக்கு போன் செய்ய, சந்தியா அறிவுறுத்துகிறார்.

உடனே போன் வரவும் அந்தப் போலிச் சாமியார் சரவணனின் வீட்டில் தனி அறை கேட்டு, அங்கு போய் சர்மாவிடம் பேசுவதை சந்தியா மற்றும் சரவணன் இருவரும் பார்த்து விடுகின்றனர். இதனால் போலிச் சாமியாரின் கோவிந்தனும் ஒரே ஆள்தான் என நிரூபணம் ஆனதால் இதன்பிறகு தகுந்த ஆதாரத்துடன் அவனை போலீசில் ஒப்படைக்க சந்தியா வெறிகொண்டு காத்திருக்கிறார்.

இருப்பினும் முன்பு சந்தியாவாக நடித்த ஆலியா மானசா அளவுக்கு ரியாவால் ஃபயர் ஆக நடிக்க முடியவில்லை. இந்த காட்சியில் ஆலியா மானசா மட்டும் நடித்திருந்தால் வேற லெவலுக்கு பிச்சு உதறி இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Next Story

- Advertisement -