குஷ்பூவுக்கு பிறகு சமந்தாவுக்கு கிடைத்த கௌரவம்.. பிறந்தநாளுக்கு இப்படி எல்லாம் செய்வீங்க

நடிகை குஷ்பூவுக்கு பிறகு சமந்தாவிற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது. சினிமாவில் பல தடைகளை மீறி தற்போது டாப் நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் சமந்தா, இன்று தன்னுடைய 36-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளான இன்றைய தினத்தில் ரசிகர் ஒருவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

நடிகைகளுக்கு கோயில் கட்டுவது என்பது புதிதல்ல. இருப்பினும் குஷ்பூ, நயன்தாராவிற்கு பிறகு அந்த கௌரவம் சமந்தாவிற்கு கிடைத்துள்ளது. நடிகை சமந்தாவிற்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் தனது வீட்டில் கோயில் கட்டியுள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

Also Read: துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்ற ரசிகர் தனது வீட்டில் உள்ள ஒரு பகுதியில் சமந்தாவிற்கு கோயில் கட்டி இருக்கிறார். அந்த கோயிலில் அவர் சமந்தாவின் சிலையை வைத்துள்ளார். மேலும் சமந்தாவின் பிறந்த நாளான இன்று அந்த கோயிலுக்கு திறப்பு விழா நடத்தி, அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்த பலரும், ‘நடிகையின் பிறந்த நாளுக்கு, இப்படி எல்லாம் செய்வீங்க!’ என்றும் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் மறுபுறம் நடிகை சமந்தா பிரதியுஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அவற்றை பாராட்டும் விதமாகத்தான் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக பிரதீப் தெரிவித்துள்ளார்.

Also Read: 80 கோடி பட்ஜெட் எகிறியதற்கு இதான் காரணமா.? மொத்தமாக சொதப்பிய படக்குழு

மேலும் தீவிர ரசிகரான அவர், இதுவரை சமந்தாவை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். நிச்சயம் சமந்தா தனக்காக கோயில் கட்டிய ரசிகரை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகவே விரைவில் அவரை அழைத்து சந்திக்க போகிறார்.

மேலும் ஆந்திராவில் சமந்தாவிற்காக கட்டப்பட்ட கோயிலில் சந்தன நிற சிலையில் தத்துரூபமாக இருக்கக்கூடிய அவருடைய உருவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கே தரிசிக்கவும் வணங்கவும் டிக்கெட் கூட தயார் செய்து விட்டார். சமந்தாவின் பிறந்த நாளான இன்று சன்னதி திறக்கப்பட்டு ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு சென்ற வருகின்றனர்.

Also Read: பிரிந்த கணவரை மறக்க முடியாமல் தவிக்கும் சமந்தா.. லண்டனில் அம்பலமான உண்மை!

Next Story

- Advertisement -