Entertainment | பொழுதுபோக்கு
துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா
ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும், துவண்டு போய் இருக்கும் நேரத்தில் அவர்களை குஜால் படுத்தும் விதமாகவும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது அந்த ஐட்டம் டான்ஸ் தான்.
சினிமாவில் எத்தனை நடிகைகள் இருந்திருந்தாலும் சில நடிகைகளுக்கு மட்டும் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதனாலேயே அந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும், துவண்டு போய் இருக்கும் நேரத்தில் அவர்களை குஜால் படுத்தும் விதமாகவும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது அந்த ஐட்டம் டான்ஸ் தான். அப்படிப்பட்ட சில நடிகைகள் அவர்களின் ரசிகர்களுக்காக வெறித்தனமாக சில பாடல்களில் குத்தாட்டம் போட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.
நயன்தாரா: தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, தலைமகன், வல்லவன் போன்ற படங்களில் நடித்து மிக பிரபலமாகினார். அதன் பின் விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்தில் நடித்தார். இப்படத்தை பிரபுதேவா இயக்கிய நிலையில் நயன்தாராவும் இவரும் திருமணம் செய்யப் போவதாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் இவர்களுக்குள் பிரச்சனை வந்தால் நயன்தாரா பிரிந்து விட்டு மறுபடியும் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தினார். அந்த நிலையில் தான் தனுஷ் தயாரிப்பில் வந்த எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் உடன் ஒரு குத்தாட்டம் ஆடி துவண்டு போன ரசிகர்களை குஷிப்படுத்தி இருப்பார்.
Also read: நயன்தாராவின் அடுத்த 5 பிரம்மாண்ட படங்கள்.. ரெட்டை குழந்தைக்கு தாயாகியும் மார்க்கெட் குறையல
சாய்ஷா: இவர் தமிழில் வனமகன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக என்ட்ரி ஆனார். அதன் பின் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தார். இதற்கிடையில் ஆர்யாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். பிறகு குழந்தை குடும்பம் என்று இருந்த நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்து தல படத்தில் ஒரு பாட்டுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு வாய்ப்பு வந்ததால் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் வந்து ஆடி இருப்பார். இப்பொழுது இந்த பாடல் தான் ட்ரெண்டிங்காக போய்க் கொண்டிருக்கிறது.
சமந்தா: இவர் பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோவுடன் ஜோடி போட்டு டாப் ஹீரோயினாக இடம் பெற்றார். பிறகு டோலிவுட் நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் சினிமாவுக்கு மறுபடியும் ரீ என்டரி கொடுக்கும் விதமாக ரசிகர்களை குஜால் படுத்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா” என்று பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டிருப்பார்.
Also read: பிரிந்த கணவரை மறக்க முடியாமல் தவிக்கும் சமந்தா.. லண்டனில் அம்பலமான உண்மை!
அஞ்சலி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் ஜீவாக்கு ஜோடியாக அறிமுகமானார். இதனை அடுத்து அங்காடித்தெரு, ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து எல்லோரும் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார். அந்த நேரத்தில் சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடி இருப்பார்.
தமன்னா: இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் 73 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைத்தும் முன்னணி ஹீரோகளுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். பல பேர் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தில் நடிகர் யாஷ் உடன் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். இதை பார்க்கும் போது பழைய காலத்து டிஸ்கோ ஸ்டைலில் இருக்கிற மாதிரி இருக்கும். இது இவர்களுடைய ரசிகர்களை ரசித்துப் பார்க்க வைத்த பாடலாக அமைந்தது.
Also read: பத்து தலையில் பிரியா பவானி ஷங்கர் சம்பளம்.. ஒரு பாட்டு ஆடி பாதி சம்பளம் வாங்கிய சாயிஷா
