சொந்த செலவில் சூனியம் வைத்த சமந்தா.. நழுவி போன தளபதி 69, விஜய்யின் கடைசி ஹீரோயின் யார் தெரியுமா.?

Samantha: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதை அடுத்து தளபதி 69 படத்தோடு அவர் சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார். மக்கள் பணிக்காக அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

இது தயாரிப்பாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பேரதிர்ச்சி தான். இருந்தாலும் அவருடைய கடைசி படம் எப்படி இருக்கும் என்று ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது. அதன்படி இப்படத்தை ஹெச் வினோத் இயக்க இருக்கிறார்.

அரசியல் கதைகளமான இப்படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே பரவி வருகிறது. ஆனால் இப்போது பார்த்தால் அவர் இப்படத்தில் நடிப்பதை விஜய் விரும்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.

இதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது சில தினங்களுக்கு முன்பு சமந்தா ஹைட்ரஜன் பெராக்ஸைடை சுவாசிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் சரியாகிவிடும் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் மருத்துவர் ஒருவர் இது முற்றிலும் தவறானது. சமந்தாவை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

வாய்ப்பை தவறவிட்ட சமந்தா

இந்த பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்த நிலையில் தான் தளபதி 69 பட குழு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர். மேலும் விஜய்க்கு சரியான ஜோடியை தேடும் வேட்டையிலும் அவர்கள் இப்போது இறங்கியுள்ளனர்.

அதன்படி தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதே சமயம் காஜல் அகர்வாலும் லிஸ்டில் இருக்கிறார். இவர்கள் இருவருமே விஜய்க்கு சரியான ஜோடி என பெயர் வாங்கி இருக்கின்றனர்.

அதனால் இவர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு தான் அதிர்ஷ்டம் அடிக்கும் என்கின்றனர். யார் கண்டது மாமி நடிகை கூட இந்த போட்டியில் இறங்கலாம். ஆக மொத்தம் சமந்தா சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாக இந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.

விஜய்யின் கடைசி படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு

Next Story

- Advertisement -