அரசியல்வாதி விஜய்யை சுத்து போட்ட பிரேமலதா.. ஒரே மேடை பேச்சால் முடிந்து போன GOAT படத்தின் AI டெக்னாலஜி

Thalapathy Vijay: கொஞ்ச நாள் காமெடி பண்ணா, நான் வில்லன் என்றதையே மறந்திடுவீங்களே என்று ஆனந்தராஜ் ஒரு படத்தில் கேட்டிருப்பார். அப்படித்தான் பிரேமலதா விஜயகாந்த் கொஞ்ச நாளாக சைலன்ட் மோடில் இருந்ததும் தமிழ் சினிமாக்காரர்கள் அவர் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஒருத்தர் இருக்கும் போது கண்டு கொள்ளாமல், மறைவிற்குப் பிறகு கொண்டாடப்படுவது என்பது வேதனையான விஷயம் தான். ஆனால் அந்த கொண்டாட்டத்தை வியாபாரம் ஆக்குவது அதைவிட மோசமான விஷயம்.

அதைத்தான் தமிழ் சினிமா தொடங்கி இருக்கிறது. விஜயகாந்த் இறந்ததும் அவருக்கு இருக்கும் புகழை நாம் படத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் எல்லோருக்குமே துளிர்விட்டு விட்டது. ஆரம்பத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் AI தொழில்நுட்ப முறையில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடினார்கள். தற்போது கழுதை கெட்டா குட்டி சுவர் என்பது போல் அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் எல்லாம் இந்த ட்ரெண்டை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதற்காக நேற்று பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அரசியல்வாதி விஜய்யை சுத்து போட்ட பிரேமலதா

அதில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட AI காட்சிகளை தங்களின் படங்களில் உபயோகப்படுத்த முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். பட விளம்பரம் மற்றும் ஆடியோ வெளியீட்டு மூலம் இதை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. இதுவரை யாருமே எங்களிடம் அனுமதி பெறவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

அவர் சூசகமாக சொல்லுவது GOAT பட குழுவினரை தான் என நன்றாக தெரிகிறது. விஜய் நடிகராக இருந்தால் கூட ஓரளவுக்கு பிரேமலதா சரி என்று போய் இருப்பார் போல. ஆனால் அரசியல் தளத்தில் தனக்கு எதிரிக்கு எதிர் போட்டியாக நிற்கும்போது அவரை வச்சு செய்ய முடிவு எடுத்து தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு வேளை முன் அனுமதி பெறவில்லை, எனவே அந்த காட்சிகள் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்று சொன்னால் GOAT படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

Next Story

- Advertisement -