அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்

Ajith, Vikram and Surya: அஜித் மற்றும் விக்ரம் இவர்கள் இருவருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது இவர்கள் சினிமாவில் நுழைவதற்கு எந்த விதத்திலும் பேக்ரவுண்ட் இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி வந்தவர்கள். அப்படிப்பட்ட இவர்கள் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களையும் தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து தற்போது முன்னணி ஹீரோவாக இடம் பிடித்திருக்கிறார்கள் என்றால் அது முழுக்க முழுக்க இவர்களின் திறமைக்கு கிடைத்த சன்மானம்.

இதற்கிடையில் விக்ரமுக்கு ஆரம்பத்தில் சரியான கதையுடன் கூடிய படங்கள் அமையாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்தது. அந்த சமயத்தில் சேது படத்தில் நடித்தது மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கேரியரை பிடித்து விட்டார். அதே மாதிரி அஜித், காதல் மற்றும் ரொமான்ஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் மனதில் நச்சென்று ஒரு இடத்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட இவர்களின் இடைப்பட்ட காலத்தில் கிடைத்த ஐந்து படங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்து இருக்கிறார்கள். அதாவது கதை பிடிக்கவில்லை என்றும்  நடித்தால் தோல்வியை தான் சந்திக்க கூடும் என்று சொல்லி வந்த வாய்ப்பை தட்டி கழித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் இந்த ஐந்து படங்களையும் வம்படியாக நான் நடித்து ஜெயித்துக் காட்டுகிறேன் என்று முன்னாடி வந்து நின்றவர் தான் சூர்யா.

Also read: கணவரின் டார்ச்சரால் சினிமாவை விட்டெறிந்த 5 நடிகைகள்.. அட்ரஸே இல்லாத மெகா ஹிட் அஜித் ஹீரோயின்

இவர் என்னதான் இவருடைய அப்பா சிவக்குமார் உடைய பெயரையும் புகழையும் வைத்து சினிமாவிற்குள் வந்தாலும் தன்னுடைய திறமையால் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்தார். அப்பொழுது அஜித் விக்ரம் வேண்டாம் என்று தூக்கி இருந்த படத்தை நடித்துக் காட்டுகிறேன் என்று சவால் விடும் படியாக நடித்திருக்கிறார். அப்படி அஜித் விக்ரம் தூக்கி இருந்த படங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.

அதாவது நேருக்கு நேர் படத்தில் விஜய் மற்றும் அஜித் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அஜித் மறுத்ததால் சூர்யா நடித்து கைத்தட்டுகளை வாங்கி விட்டார். அடுத்ததாக நந்தா படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த கேரக்டர் எனக்கு சூட் ஆகாது என்று சொல்லியதால் அதை சூர்யா எடுத்து நடித்து இவருடைய கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொண்டார்.

அடுத்தபடியாக மௌனம் பேசியதே படத்தில் விக்ரமுக்கு பதிலாக சூர்யா நடித்து பெண்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். இதனை எடுத்து காக்க காக்க படத்தில் விக்ரம் தவறவிட்ட வாய்ப்பை சூர்யா நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்தார். அடுத்ததாக கஜினி படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அஜித் நடிக்க மறுத்து விட்டார். அதன்பின் சூர்யா நடித்தார். இப்படி அஜித் விக்ரம் தவறவிட்ட படங்களில் சூர்யா நடித்து சினிமா கேரியரில் அவருக்கான அந்தஸ்தை பெற்றுக் கொண்டார்.

Also read: இந்த அஞ்சு டைரக்டர்ல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை லாக் செய்த சூர்யா.. எனக்கு ஏத்த மூளைக்காரன் நீதான்

Next Story

- Advertisement -