தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி T20 உலக கோப்பையை வென்ற இந்தியா.. பயங்கர ஷாக் கொடுத்த ரோஹித், விராட் கோலி

T20 World Cup: டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இதில் விராட் கோலி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்திருந்தார். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி அதிவேகத்தில் விளையாடி கோப்பையை கைப்பற்றுவதில் குறியாக இருந்தது.

ஆனால் இந்திய அணி சிறப்பான யுக்தியை பயன்படுத்தி அவர்களின் வேகத்தை குறைத்தது. அதுவே வெற்றியையும் தேடி கொடுத்திருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்திய அணியின் இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதே சமயம் ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஓய்வு பெறும் ரோஹித் சர்மா, விராட் கோலி

அதன்படி செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா தன்னுடைய ஓய்வை அறிவிப்பதற்கு இதுதான் சரியான சமயம். இதுவே என்னுடைய இறுதி போட்டி என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் விராட் கோலியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் விளையாடுவார்கள். இது ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும் தன் பதவியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

T20 உலக கோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி

Next Story

- Advertisement -