T20 World Cup : 4 ஸ்பின்னர்களின் தேர்வு ஏன்.? இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் பதில்

T20 உலகக்கோப்பை வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் இந்திய அணியில் பங்கு பெரும் 15 போட்டியாளர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்களின் தேர்வு ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் நான்கு ஸ்பின்னர்கள் தேவை என்று நான் தான் கூறினேன் என்று ரோகித் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணத்தை பிறகு கூறுவதாக குறிப்பிட்டார்.

அதன்படி குல்தீப், யுஸ்வேந்திரா சாகல் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்கள். அதேபோல் அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆல் ரவுண்டராக உள்ளனர். ஆகையால் இருவர் ஆல் ரவுண்டராகவும், மற்ற இருவர் பந்து வீசக்கூடியவர்கள்.

நான்கு ஸ்பின்னர்களின் தேர்வுக்கான காரணத்தை கூறிய ரோகித் சர்மா

ஆகையால் எதிர் அணியின் பலத்தை அறிந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்சர் படேல் நல்ல ஃபாமில் இருந்ததால் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். அதோடு ஸ்பின்னர்கள் தேர்வில் நிறைய தொழில்நுட்ப சார்ந்த விஷயங்கள் உள்ளடங்கி உள்ளது.

மேலும் இந்திய அணியில் டாப் ஆர்டர் அருமையாக அமைந்துள்ளது. மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய நபர் தேவைப்பட்டார். அதனால் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே தேர்வு செய்யப்பட்டார்.

ஆல்ரவுண்டரான சிவே துபே மற்றும் ஹாட்ரிக் பாண்டியா இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அமெரிக்கா சென்ற பின் மற்ற விஷயங்களை பகிர்வதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -